சென்னை: ஆன்லைனில் பேங்க் லோன்.. கவர்ச்சி பேச்சு.. ஆண்களை வரவழைத்து பெண் செய்த வேலை! - Seithipunal
Seithipunal


சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் மீனா. இவர் பேங்க் லோன் வாங்கி தருவதாக ஆன்லைனில் தனது செல்போன் எண்ணை பதிவு செய்துள்ளார். மீனா-வுக்கு உதவியாக பாரிமுனையை சேர்ந்த சங்கர் என்பவர் இருந்துள்ளார்.

ஆன்லைனில் சிலர் மீனாவுக்கு போன்செய்துள்ளனர். அவர்களிடம் மீனா உங்களின் ஆதார், ரேஷன் கார்டு, பான்  கார்டு எடுத்துக்கொண்டு மண்ணடி அலுவலகத்திற்கு வாங்க என்று சொல்லியுள்ளார். இதை தொடர்ந்து சந்துரு, பிரவின்குமார், பெளசியா பேகம் ஆகியோர் அங்கு சென்று மீனாவை சந்தித்து லோன் குறித்து பேசியுள்ளனர். அவர்களிடமிருந்து ஆதார், ரேஷன் கார்டு, பான்  கார்டு ஜெராக்ஸ்களில் கையெழுத்து வாங்கி கொண்டு, சில ஆயிரங்களை கமிஷனாக பெற்று கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து லோன் வர சில மாதங்கள் ஆகும் என்று கூறியுள்ளார். அந்த 3 பேர் செல்போன் எண்ணுக்கு, டிவி, பிரிட்ஜ், ஏசி போன்ற அப்பொருட்களுக்கு இஎம்ஐ கட்டவேண்டும் என்று மெசேஜ் வந்துள்ளது.  இதை கண்டு மூன்று பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.  இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

இதை தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், மீனா மற்றும் சங்கர் இருவரும் சேர்ந்து லோன் வாங்கி தருவதாக கூறி ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு, அதில் தவணை முறையில் வீடு உபயோகப்பொருட்கள் வாங்கியது தெரியவந்தது. மேலும், இருவரையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fake bank loan for chennai girl


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->