கிராம புறங்களில் டிஜிட்டல் தொழிலை மேம்படுத்த களத்தில் இறங்கிய பேஸ்புக், ஹெச்டிஎப்சி வங்கி.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் உள்ள ஒரு லட்சத்துக்கு அதிகமான பொதுச் சேவை மையங்ளில் கிராம மக்கள் தொழில் தொடங்குவதற்கான உதவியைச் செய்ய ஹெச்டிஎப்சி வங்கி மேற்கொண்டு வருகிறது. அரசின் பொதுச் சேவை மையங்கள் மூலம் கிராமப்புற மக்கள் தொழில் தொடங்க ஆலோசனைகளையும் நிதி உதவியையும் வழங்குதல் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தொழில் செய்தல் போன்றவற்றில் பயற்சி அளிக்க ஹெச்டிஎப்சி வங்கியும் பேஸ்புக் நிறுவனமும் ஒப்பந்தம் செய்துள்ளன. 

சிறு குறு தொழில்களுக்கான பிரத்யேக கிரெடிட் கார்டு ஹெச்டிஎப்சி வங்கி சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனம் இந்த ஒப்பந்தத்தில் சேர்வதன் மூலம் 5000 பொதுச் சேவை மையங்களில் டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை வகுத்த பின், 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராமங்களில் சுமார் 2.5 லட்சம் தொழில்முனைவோருக்கு வழங்கப்படும்.

பொதுச் சேவை மையங்கள் மூலம் பயற்சி பெற்ற கிராமப்புற தொழில்முனைவோர் தற்போது சுமார் 70,000 கோடி மதிப்பிலான வணிகம் நடக்கிறது எனவும் இதனை அடுத்த ஐந்து ஆண்டுகளில் 3 லட்சம் கோடியாக அதிகப்படுத்த வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்  குறிப்பிட்டிருக்கிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

facebook, hdfc bank helping for village peoples


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->