காலாவதியான மருந்துகளை அனுப்பி வைத்த, தமிழ்நாடு மருத்துவக் கழகம்…! விஷயத்தைப் போட்டு உடைத்த ஆளும் கட்சி எம்.எல்.ஏ…! - Seithipunal
Seithipunal


 

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்களின் குழுவினர், அந்தக் குழுவின் தலைவரான எம்.எல்.ஏ. செம்மலையுடன் நாமக்கல் மாவட்டத்துக்கு வந்தனர்.

நாமக்கல்லில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில், பல்வேறு அரசுத் துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினர். அந்தக் கூட்டத்தில், எம்.எல்.ஏ. செம்மலை பேசியதாவது-

“தமிழ்நாடு மருத்துவக் கழகம், 7 லட்ச ரூபாய் மதிப்பிலான, காலாவதியான மருந்துகளை, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியது தற்போது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

வரும் காலத்தில், இது போன்ற தவறுகள் நடக்கக் கூடாது, என சுகாதாரத் துறைகளுக்கு, அறிவுறுத்தப் பட்டுள்ளது. காலாவதி தேதியைப் பார்த்து தான், இனி மருந்துகளை, அந்தந்த மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.”

இப்படி, ஆளும் கட்சி எம்.எல்.ஏ-வான செம்மலை, மருத்துவ கழகம் மீது குற்றம் சுமத்தி இருப்பது, ஆச்சர்யத்தை அளித்தது.

சாத்துாரில், கர்ப்பிணிப் பெண்ணுக்கு, எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப் பட்டது தொடர்பான, பிரச்சினை பெரிதாகி விட்ட நிலையில், செம்மலையின் இந்தப் பேச்சு, பொது மக்களிடையே, மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

expired medicine supplied in Govt. hospital


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->