அதிமுக பிரமுகர் மீது புகாரளிக்க விபத்து நாடகம்.. சி.சி.டி.வி காட்டிக்கொடுத்ததால் அம்முனி தலைமறைவு.! - Seithipunal
Seithipunal


இருசக்கர வாகனத்தில் சென்றபடி விழுந்த பெண், தன்னை அதிமுக பிரமுகர் ஆல் வைத்து கொலை செய்ய முயற்சித்ததாக போலி புகாரளித்தது, சி.சி.டி.வியில் நாடக சித்தரிப்பு காட்சிகள் சிக்கியதால் தலைமறைவான சம்பவம் நடந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிச்செட்டிபாளையம் கோசனம் பகுதியை சார்ந்த பெண்மணி கனகவல்லி. இவர் சம்பவத்தன்று தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருக்கும் போது கீழே விழுந்துள்ளார். ஆனால், அதிமுக பிரமுகரின் மீது புகார் அளிக்க வேண்டும் என்றே விழுந்து வாரிக்கொண்டது உறுதியானது. 

வாகனத்தில் இருந்து கீழே விழுந்த கனகவல்லி அங்குள்ள மருத்துவமனையில் சென்று அனுமதியாகி, நம்பியூரை சார்ந்த அதிமுக பிரமுகர் தன்னை ஆள் வைத்து கீழே தள்ளிவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர், இது குறித்து விசாரணை செய்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு அருகே இருந்த கண்காணிப்பு கேமிராவை சோதனை செய்த அதிகாரிகள், கனகவல்லி கூறிய சமயத்தில் அவரே சென்று கீழே விழுந்ததை உறுதி செய்துள்ளனர். மேலும், சம்பவத்தின் போது அவரை அச்சுறுத்தும் வகையில் எந்த வாகனமும் வரவில்லை. பெண்மணி கூறியது பொய்யான புகார் என்பதை உறுதி செய்த அதிகாரிகள், அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். 

இதனை அறிந்த கனகவல்லி மருத்துவமனையில் இருந்து தப்பி சென்று தலைமறைவாக, அவரை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பெண் இது குறித்து தெரிவிக்கையில், " பின்னால் இரண்டு பேர் விரட்டி வந்தார்கள். 

நான் இரண்டு இடத்தில் நின்று பூ மார்க்கெட் சென்றேன். பூ மார்க்கெட் சென்று திரும்புகையில், மீண்டும் என்னை விரட்டியவர்கள் என் மீது வாகனத்தை நிறுத்துவது போல வந்தார்கள். குரும்பூர் ரைஸ் மில் அருகே எனது வாகனத்தை நெறுக்கியதால் குழியில் வண்டியை போட்டு விழுந்தேன் " என்று தெரிவித்துள்ளார். இது குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

என்ன ஒரு நாடகம்..

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode Woman Drama Murder Attempt Captured by CCTV Now She Obscene on Hospital


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->