ஈரோடு: கள்ளக்காதலுக்கு அன்பான மனைவியை பலிகொடுத்த கொடூர கணவன்.. விசாரணையில் பல அதிர்ச்சி திருப்பங்கள்.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் காவலர் குடியிருப்பு பகுதியை சார்ந்தவர் சபரிநாதன் (வயது 30). இவர் கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரை சார்ந்த அறிவழகன் என்பவரின் மகள் தரணிதேவிக்கும் (வயது 25) என்பவருக்கும் இடையே கடந்த 3 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இவர்களுக்கு ஒன்றரை வயதுடைய கவின் பிரசன்னா என்ற மகன் இருக்கிறான். 

கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக, கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக கோபித்துக்கொண்டு தரணிதேவி தனது பெற்றோரின் வீட்டிற்கு சென்று குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மனைவியின் வீட்டிற்கு சென்ற சபரிநாதன், அவரை சமாதானம் செய்து மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பின்னர், அந்தியூரில் உள்ள வீட்டில் குழந்தையை விட்டுவிட்டு, மனைவியை காரில் அழைத்து சென்றுள்ளார்.

இவர்கள் இருவரும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் கோட்டைமேடு மேம்பாலம் பகுதியில் செல்கையில், காரை வழிமறித்த மர்ம நபர்கள் 7 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்றதாகவும், தாக்குதலில் தரணிதேவி உயிரிழந்ததாகவும் குமாரபாளையம் காவல் நிலையத்திற்கு சென்ற சபரிநாதன் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகையில், சபரிநாதனின் பக்கம் சந்தேகம் திரும்பியுள்ளது. 

சந்தேகமடைந்த காவல் துறையினர் சபரிநாதனிடம் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினருக்கு பேரதிர்ச்சியாக மனைவியை கொலை செய்த தகவல் தெரியவந்துள்ளது. இது தொடர்பான சபரிநாதனின் வாக்குமூலத்தில், " திருமணத்திற்கு முன்னதாக நான் 3 வருடத்தில் இராணுவத்தில் பணியாற்றினேன். இராணுவத்தில் பணி பிடிக்கவில்லை என்ற காரணத்தால், அதனை விட்டுவிட்டு அரசு வங்கியில் தாற்காலியாக பணியாளராக பணிக்கு சேர்ந்தேன். 

திருமணத்திற்கு முன்னதாகவே எனக்கு திருமண பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இந்த சமயத்தில், எனக்கும் - தரணிதேவிக்கும் திருமணம் நடைபெற்று முடிந்தது. திருமணத்திற்கு பின்னர் எனது கள்ளக்காதல் விவகாரம் தரணிதேவிக்கு தெரியவரவே, அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 6 மாதத்திற்கு முன்னதாக தரணிதேவி கோபித்துக்கொண்டு குழந்தையுடன் அவரது தந்தையின் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஆத்தூருக்கு சென்ற நான் மனைவியை சமாதானம் செய்து புதிய வீட்டிற்கு தனிக்குடித்தனம் செல்லலாம் என அழைத்து, காரினை குமாரபாளையம் சுங்கவடியை கடந்து இயக்கி வருகையில் பிற பெண்களுடன் கள்ளக்காதல் இருக்கிறதா? என்று என்னிடம் மனைவி கேட்டார். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த நான் பல்லக்காபாளையம் அருகே வருகையில் அவரை கன்னத்தில் அடித்தேன். கழுத்தை நெரித்து கொலை செய்தேன். 

பின்னர், அவளது கழுத்தில் கிடந்த நகையை எடுத்து, எனது தந்தைக்கு தொடர்பு கொண்டு விஷயத்தை தெரியப்படுத்தி மருத்துவமனைக்கு மனைவியை கொண்டு சென்றேன். மேலும், வழிப்பறி கொலை முயற்சி சம்பவம் என காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தேன். மருத்துவமனையில் எனது மனைவி இறந்துவிட்டதாக தெரிவிக்கவே, காவல்துறையினரின் விசாரணையில் நான் சிக்கிக்கொண்டேன் " என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, சபரிநாதனை கைது செய்துள்ள காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். மேலும், இந்த விஷயம் தொடர்பாக தரணிதேவியின் தந்தை குமாரபாளையம் காவல் நிலையத்தில், சபரிநாதனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது என்று புகார் அளித்து, கள்ளகாதலியுடன் வாழ எனது மகளை கொலை செய்துவிட்டான் என்று கதறியழுதுள்ளார். அவருக்கு ஆறுதல் தெரிவித்து அனுப்பி வைத்தனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ERODE WOMAN DHARANI DEVI MURDER BY HUSBAND SABARINATHAN ISSUE 14 JUNE 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->