டிரைவர் அண்ணா.. லாரியை நிப்பாட்டுங்க..! எம்புள்ளைக்கு பசிக்குது., கரும்பை குட்டியுடன் ருசித்த தாய் யானை.!! - Seithipunal
Seithipunal


தாய் யானையொன்று குட்டியுடன் சேர்ந்து கரும்பு லாரியை மறித்து கரும்பை சாப்பிட்டு சென்ற நிகழ்வு நடந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான யானைகள் இருக்கின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து சத்யமங்கலத்திற்கு கரும்பு ஏற்றிவரும் லாரிகளில் இருந்து கீழே விழும் கரும்பு துண்டுகள் சாலையில் விழுந்து கிடந்தால், அதனை யானைகள் அதிகாவு விரும்பி உண்ணுவது வழக்கம். 

காலப்போக்கில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேகத்தடைகள் ஏற்படுத்தப்பட்டதன் காரணமாக, வாகனத்தில் இருந்து விழும் கருப்புகளை யானைகள் சாப்பிட்டு வந்தது. சில நேரங்களில் அதிக பசியெடுக்கும் பட்சத்தில், கரும்பு லாரிகளை மறித்து இடைநிறுத்தி கரும்புகளை சாப்பிட்டு செல்லும். 

இந்நிலையில், சத்தியமங்கலம் காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே, கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ்நகரில் இருந்து கரும்பு ஏற்றிவந்த லாரியை குட்டியுடன் சேர்ந்து இடைமறித்த யானை, லாரியில் இருந்த கரும்பை பிடுங்கி குட்டிக்கு கொடுத்தது. 

பின்னர், யானையும் தனது பசியை போக்கும் பொருட்டு கரும்புகளை சாப்பிட்ட நிலையில், தொடர்ந்து அணிவகுத்து நின்று வாகனங்கள் ஹாரன் ஒலியை எழுப்பியதால் கிடைத்த கரும்பை துதிக்கையில் சேகரித்து காட்டுக்குள் சென்றது. மேலும், வனத்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து யானையை விரட்டும் செயலில் ஈடுபட்டனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode Sathyamangalam Elephant Stops Lorry and Eat Sugarcane With Child Elephant


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->