பட்டப்பகலில் கேமராவில் பதிவான வெண்மை உருவம்.. அதிர்ந்துபோன மக்கள்.!! - Seithipunal
Seithipunal


ஈரோடில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு காமிராவில் பகல் வேளையில் குறிப்பிடத்தக்க உருவம் ஒன்று கேமராவில் பதிவானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஈரோடு நகரில் இருந்து சேலம், நாமக்கல் மாவட்டங்களுக்கு செல்லும் மாவட்ட எல்லையில் உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் ஒன்று உள்ளது. 

இந்த மேம்பாலத்திற்கு அருக சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு, அங்கு கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த கேமராக்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பகல் வேளையில் சாலையில் வெள்ளை உருவமானது குறுக்கே கடந்து போவது போல காட்சியானது பதிவானது. 

இந்த காட்சிகள் அங்குள்ள காவல் துறையினரால் பார்க்கப்பட்ட நிலையில், இது என்ன என்று தெரியாமல் இருந்து வந்தனர். இதனையடுத்து இது குறித்து ஆய்வு மேற்கொண்ட  அதிகாரிகள், இந்த காட்சிகள் சிக்னல் குறைபாடு காரணமாக கேமராவில் ஏற்படும் இமேஜ் அலைனிங் (Image Aliasing) என்ற தொழில்நுட்ப கோளாறு என்றும், இதுபோன்ற தொழில்நுட்ப கோளாறு ஏற்படும் பட்சத்தில், சில நேரத்தில் இவ்வாறான உருவங்கள் பதிவாகலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode Salem Bye pass road Image Aliasing issue on camera


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->