ஈரோட்டில் ரேஷன் கடை ஊழியரிடம் கொள்ளை..! 5 பேர் கும்பல் கைது.!! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியரிடம் நகையை மர்மநபர்கள் பறித்த சம்பவம் நடந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி உள்ள ஈஞ்சம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கவிதா. இவர் மொடக்குறிச்சி ரேஷன் கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். சம்பவதன்று வழக்கம் போல பணிமுடித்து விட்டு கவிதா தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில், மானூர் ரோடு சுமைதாங்கி வாய்க்கால் பாலம் வழியாக சென்று கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் அவரை வழிமறித்து அவரிடம் இருந்த நகையை பறித்தனர். பின்னர் அங்கிருந்து தப்பிசென்று விட்டனர். 

இதனையடுத்து உடனடியாக கவிதா மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரை அடுத்து  கொள்ளையர்களை பிடிக்க ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜு, போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படைக்குழு கொள்ளையர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். 

சாவடிப்பாளையம் புதூர் ரெயில்வே நுழைவு பாலம் பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் சந்தேகத்துக்குரிய வகையில் இருந்த ஐவரிடம் விசாரணை மேற்கொண்டனர். கரூர் மாவட்டம் பஞ்சமாதேவி வடக்கு தெருவை சேர்ந்த கந்தசாமி என்பவரது மகன் தினகரன் (25), வடக்கு காந்திகிராமம் பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரது மகன் பிரவீன்குமார் (23), கிருஷ்ணராயபுரம் மணவாசி கேபி குளம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் மணிகண்டன் (23), படிக்கட்டு துறை வள்ளியம்மை இல்லத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவரது மகன் பிரதீப் என்கிற வெள்ளையன் (26) மற்றும் 19 வயது வாலிபர் உள்பட 5 பேர் எனவும் ரேஷன் கடை  ஊழியர் கவிதாவிடம் கொள்ளையடித்தை ஒப்புக்கொண்டனர்.

இவர்களிடம் இருந்து 7 பவுன் தங்க சங்கிலி மற்றும் கொள்ளையடிக்க பயண்படுத்திய வாகனம் முதலியவை பறிமுதல் செய்யபட்டன. இதனை தொடர்ந்து அவர்கள் கைது செய்யபட்டனர். இவர்கள் பல கொள்ளை வழக்குகளில் சம்மந்தபட்டுருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode Ration Shop Employee Jewel Robbery by 5 Man Gang Police Arrest All Culprits


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->