மதுபான கடையை எதிர்த்து போராட்டம்... இரண்டு நாட்களாக வீதியில் இருக்கும் பெண்கள்.. சிறுமிகள்.. கண்டுகொள்ளாத தமிழக அரசு.!! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே புதிய மதுபான கடையினை அமைக்கும் முயற்சியில் அரசு இருந்து வருகிறது. இந்த பகுதியில் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில், கடந்த டிசம்பர் மாதமே இம்முயற்சி நடந்துள்ளது. 

இந்த விஷயத்திற்கு மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த மதுபான கடை அமைக்கும் முயற்சி கைவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் 8 மாத காலத்திற்கு பின்னர் மதுபான கடையை அமைக்கும் முயற்சி துவங்கியுள்ளது. 

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், தங்களின் குழந்தைகளுடன் மதுபான கடைக்கு முன்னர் பந்தல் அமைத்து சமையல் செய்து நூதன போராட்டம் நடத்தினர்.

சுமார் இரண்டு நாட்களாக இந்த போராட்டம் அப்பகுதியில் நடந்து வரும் நிலையில், அரசு இப்பிரச்சனையில் தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ERODE PUBLIC PROTEST AGAINST WINE SHOP


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->