#Breaking: நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர்.. கொண்டாட்டத்தில் ஈரோடு மக்கள்..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ஈரோடு மாவட்டத்தில் குடிமரமத்து திட்டத்தின் கீழ் ஏரிகள் மற்றும் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு, விவசாயிகளுக்கு அந்த மண்ணும் வழங்கப்பட்டுள்ளது. குடிமரமத்து திட்டத்தின் மூலமாக நீரை சேகரித்து விவசாயத்திற்கும், மக்களுக்கும் உபயோகம் செய்யும் வகையில் ஏற்படுத்தி வழங்கப்பட்டுள்ளது. 

கீழ்பவானி திட்ட கால்வாய் ரூ.935 கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ளது. மெட்டுக்கரை கால்வாய் நீர்க்கசிவு சரிசெய்ய ரூ.65 கோடி செலவில் சரி செய்யப்பட்டுள்ளது. வரும் நடப்பாண்டில் மேலும் ரூ.19 கோடி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. அத்திக்கடவு - அவிநாசி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது 30 விழுக்காடு நிறைவு பெற்றுள்ளது. 

இதனால் 24 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். பவானி ஆற்றின் குறுக்கே 7 தடுப்பணைகள் கட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ரூ.81 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. காலிங்கராயன் வாய்க்கால் கரைகளை பலப்படுத்தவும், மக்களுக்கு நீர் அனைத்து இடங்களிலும் செல்லும் வகையில் ரூ.70 கோடி புனரமைப்பு பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கோபி குண்டேரிகுளத்தை மேம்படுத்தவும், கால்வாயின் குறுக்கே 3 தடுப்பணைகளை கட்டவும் ரூ.7 கோடி செலவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெருந்துறை மற்றும் திருப்பூரில் கொடுவெறி கூட்டுகுடிநீர் திட்டத்தில் ரூ.277 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ.100 கோடி தொகை பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. 72 விழுக்காடு பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

ஈரோடு மாநகராட்சி மக்களுக்காக ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் காவேரி நீர் வழங்கும் திட்டத்திற்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 2 மாதத்தில் இப்பணிகள் நிறைவு பெற்றபின், ஈரோடு மாநகராட்சி மக்களுக்கு காவேரி நீர் கிடைக்கும். அதிநவீன மருத்துவமனை, புறவழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. ஈரோடு - சித்தோடு, தொப்பூர் - பவானி திட்டங்கள் செயப்படுத்தப்படவுள்ளது என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode Peoples happy for Edappadi Palanisamy interest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->