திருமண புரோக்கரில் இருந்து, அந்த புரோக்கராக மாறி கொள்ளை சம்பாத்தியம் பார்க்கும் கும்பல்.. திருமணம் ஆகாதவர்கள் உஷார்.! - Seithipunal
Seithipunal


திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் தவித்து வந்த இளைஞர்களை குறிவைத்து புரோக்கர்கள் செய்த நூதன மோசடி வெளிவந்துள்ளது. 

ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை குட்டை தயிர்பாளையம் பகுதியை சேர்ந்த 37 வயது முருகேசன். ஒருவர் தரிப்பட்டறையில் பணியாற்றி வரும் நிலையில், நீண்ட நாட்களாக திருமணத்திற்கு பெண் தேடியும் கிடைக்கவில்லை. 

இந்நிலையில், திருமண தரகர் கவுசி என்பவரின் அறிமுகம் கிடைக்கவே, அவர் தனக்கு தெரிந்த உறவுக்காரப் பெண் ஒருவர் 36 வயதில் திருமணம் ஆகாமல் இருப்பதாகவும், அந்த பெண்ணை முறைப்படி பேசி திருமணம் செய்து வைப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

கவுசியின் பேச்சில் உண்மை இருப்பதாக நம்பிய முருகேசன், அவரது உறவினர்கள் ஆகியோர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசிக்கு சென்று கவுசியின் மூலமாக 36 வயது பெண் தேவியை திருமணத்திற்கு பேசி முடித்துள்ளனர். இவர்களின் திருமணம் ஈரோடு ஈஸ்வரன் கோவிலில் வைத்து நடைபெற்றது. 

மேலும், தேவியின் சித்தி கோமதி, சௌந்தரராஜா, நாகராஜன் உள்ளிட்டோரையும் உறவினர்கள் என கவுசி அறிமுகம் செய்து வைத்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் தேதி திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், திருமணம் முடிந்த கையோடு, புரோக்கர் கமிஷன் ரூபாய் ஒரு இலட்சத்து முப்பதாயிரம் பணத்தையும் கவுசி பெற்றுக் கொண்டுள்ளார். 

திருமணம் முடிந்த ஒரே வாரத்தில் மறு வீட்டிற்கு விருந்திற்கு செல்ல வேண்டும் என்று முருகேசனின் மனைவி தேவி தெரிவித்த நிலையில், கோவையில் உள்ள தேவியின் சித்தி வீட்டிற்கு இருவரும் சென்றுள்ளனர். அங்கிருந்து பல்லடம் பகுதியில் உள்ள அண்ணன் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று தேவி கூறிய நிலையில், பல்லடம் பேருந்து நிலையத்தில் முருகேசனை தவிக்கவிட்டு தேவி சென்றுள்ளார். 

பின்னர், அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்கையில், நான்கு நாட்கள் கழித்து வீட்டிற்கு வருவதாக தேவி கூறியுள்ளார். இதனை நம்பிய முருகேசனும் தனது வீட்டிற்கு திரும்பிச் சென்ற நிலையில், ஒரு வாரம் கடந்தும் மனைவி வீட்டிற்கு வராத நிலையில் தொடர்பு கொண்டு கேட்டபோது, சரிவர பதில் இல்லை. 

இதனால் சந்தேகமடைந்து கவுசியிடம் கேட்கவே, அவர் மனைவியின் உறவினர்களிடம் விசாரியுங்கள் என்று கூறி நழுவியிருக்கிறார். இதனையடுத்து, நேரில் சென்று விசாரணை செய்கையில் தேவியின் சித்தி, அண்ணன் என நடித்த அனைவருமே திருமண புரோக்கர்கள் என்பதும், திருமணமாகாத இளைஞர்களை குறிவைத்து இவர்கள் நாடகத் திருமணம் செய்து கமிஷனில் மோசடி செய்ததும் அம்பலமானது. 

இந்த விஷயம் தொடர்பாக சித்தோடு காவல் நிலையத்தில் முருகேசன் புகார் அளித்த நிலையில், விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளார். விசாரணையில், இந்த கும்பல் பல இளைஞர்களை குறிவைத்து திருமணம் என்ற போர்வையில் ஏமாற்றிய நிலையில், முதலிரவு விஷயத்தை மேற்கோள்காட்டி மாப்பிள்ளை வீட்டாரை மிரட்டியதால், அவர்கள் பயந்து இதுகுறித்து புகார் அளிக்காமல் இருந்ததும் அம்பலமாகியுள்ளது.

இதுபோன்ற வேலையெல்லாம் வெளி உலகில் எப்படி கூறுவார்கள் என்பது மேலே உள்ள கும்பலுக்கு புரிந்தால் சரி...

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode Marriage Brokers Promote Prostitution Brokers Trap Youngsters and Make Fraud Marriage


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->