ஈரோடு: கடனுக்காக மொத்த குடும்பத்திற்கும் விஷ மாத்திரை.. விஷமியின் செயலால் 3 உயிர் பலி.. ஒருவரின் உயிர் கவலைக்கிடம்.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை பகுதியைச் சார்ந்தவர் கருப்பண்ணன். இவரது மனைவி மல்லிகா. இவர்கள் இருவருக்கும் தீபா என்ற மகள் இருக்கிறார். இவர்களின் வீட்டில் பணிப்பெண்ணாக குப்பாயி அம்மாள் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். 

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை குப்பாயி அம்மாள் தோட்டத்தில் பணியாற்றி வந்த நிலையில், இவர்களோடு கருப்பண்ணன் மற்றும் அவரின் குடும்பத்தினர், கருப்பனனின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்துவந்த கல்யாண சுந்தரம் என்ற நபர் இருந்துள்ளார். 

இதன்போது டிப்டாப்பாக உடையணிந்து வந்த ஒருவன், தடுப்பூசி முகாமில் இருந்து வருவதாக கூறி, சத்து மாத்திரைகள் என நான்கு மாத்திரையை கொடுத்திருக்கிறான். கல்யாண சுந்தரத்திற்கும் மாத்திரை கொடுக்கப்பட்ட நிலையில், தான் சாப்பிட்ட பிறகு சாப்பிட்டு கொள்கிறேன் என்று அவர் கூறி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார். 

மாத்திரை கொடுத்த இளைஞன் அவரது இரு சக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு உடனடியாக அங்கிருந்து சென்ற நிலையில், சிறிது நேரத்தில் மாத்திரை சாப்பிட்ட கருப்பணன் மற்றும் அவரது மனைவி மல்லிகா, மகள் தீபா, பணிப்பெண் குப்பையி அம்மாள் வாந்தி எடுத்து இருக்கின்றனர்.

இதில், சம்பவ இடத்திலேயே மல்லிகா உயிரிழந்த நிலையில், அக்கம்பக்கத்தினர் பிறரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவமனையில் குப்பாயி அம்மாள் மற்றும் தீபா அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில், கவலைக்கிடமான நிலையில் கருப்பணன் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த நிலையில், 4 பேரும் சாப்பிட்ட மாத்திரை பூச்சிக்கொல்லிக்காக பயன்படுத்தப்படும் செல்பாஸ் மாத்திரை என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சம்பவம் தொடர்பாக கருப்பண்ணன் குடும்பத்தோடு பேசிக்கொண்டிருந்த கல்யாணசுந்தரம் மற்றும் சபரி என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். 

விசாரணையில், நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்த கல்யாணசுந்தரம், கருப்பனனிடம் ரூபாய் 13 லட்சத்திற்கும் மேல் கடன் வாங்கியுள்ளார். இந்த கடனைக் கேட்டு கருப்பணன் நெருக்கிய கொடுக்கவே, அவரை குடும்பத்தோடு கொலை செய்ய திட்டமிட்ட கல்யாணசுந்தரம், தனது உறவினர் மகனான கல்லூரியில் இரண்டாம் வருடம் பயின்றுவரும் மாணவரான சபரியையும் ஏற்பாடு செய்து கொலை செய்துள்ளார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode Loan Issue Family Members Murder Police Arrest 2 culprits 27 June 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->