மாவட்ட நிர்வாகத்தின் தலையீட்டுக்கு பின் சம்மதம்.. ஈரோடு தனியார் மருத்துவமனையில் பஞ்சாயத்து.!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் காப்பீட்டுத் திட்டத்தை ஏற்க மறுத்த தனியார் மருத்துவமனை நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்தின் தலையீட்டால் அரசின் உத்தரவை மதித்த சம்பவம் நடந்துள்ளது. 

தமிழகத்தில் தினமும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மேலும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல் மணிக்கணக்கில் காத்திருக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது. 

தனியார் மருத்துவமனையில் தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டில் சிகிச்சை பெற்றுக்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், சில தனியார் மருத்துவமனைகள் அதனை அவமதித்து வருகிறது. மேலும், நோயாளிகள் சேரும்போதே குறிப்பிட்ட தொகையை முன்பணமாக வாங்கிக்கொண்டு, அரசின் காப்பீடு இந்த மருத்துவமனையில் எங்களுக்கு தேவையில்லை என்று சூழ்நிலையை பொறுத்து வசூல் வேட்டையும் நடத்தி வருகிறது. 

இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெப்படை பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவருக்கு கடந்த 11 நாட்களுக்கு முன்னதாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவரது மனைவி பாக்கியலட்சுமி தனது கணவரை அரசு மருத்துவமனையில் அனுமதி செய்ய முயற்சித்துள்ளார். 

அங்கு ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை கிடைக்காத காரணத்தால், கணவரின் உயிரை காப்பாற்ற கோரி ஈரோடு சம்பத் நகர் பகுதியில் செயல்பட்டுவரும் கல்யாணி கிட்னி கேர் என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளார். தமிழக அரசின் காப்பீடு செல்லுபடியாகும் மருத்துவமனையில், இந்த மருத்துவமனையும் ஒன்றாகும். கணவரின் உயிரை காப்பாற்ற செவ்வாய்க்கிழமை வரை ரூபாய் 75 ஆயிரம் வரை சிகிச்சைக்காக பணம் கட்டியுள்ளார். 

மொத்தமாக பதினொரு நாட்கள் ஆகிய நிலையில், அந்த மருத்துவமனை நிர்வாகம் ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதன்போது பிரபுவின் மனைவி பாக்கியலட்சுமி தமிழக அரசின் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தை ஏற்றுக்கொள்ள மருத்துவமனை நிர்வாகத்தை அறிவுறுத்திய நிலையில், அதற்கு அந்த நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

இதனையடுத்து, இதுதொடர்பான தகவலை மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டு, இதுகுறித்து எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை வைக்கவே, மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலுக்கு பின்னர் மருத்துவமனை நிர்வாகம் அரசின் காப்பீடை ஏற்றுக்கொண்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode Kalyani Kidney Care Hospital After Approve TN Govt Scheme to Corona Treatment


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->