பெண்களை தூண்டில் போட்டு சீரழித்த காமுகன்.. நகை பணத்தை கண்ணில் காட்டியதும் எஸ்கேப்.. கண்ணீரில் கதறும் இளம்பெண்.!! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தை சொந்த ஊராகக் கொண்ட காமுகனின் பெயர் உமர். இவன் டிக் டாக் செயலியில் அறிமுகமாகி, இதன் மூலமாக பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்து வந்துள்ளான். டிக் டாக் செயலியில் இவனது நடிப்பை பார்த்து வியந்த பெண்ணின் வாழ்க்கையை சீரழித்த சம்பவம் தற்போது வெளியே வந்துள்ளது. 

டிக் டாக் செயலியில் இவனைப் போலவே அடிமையாக இருந்த பெண்ணின் பெயர் சர்மிளா. சர்மிளாவை கண்ட காமுகன் அவரை மயக்க திட்டமிட்டு, மெல்ல மெல்ல தனது காதல் கவிதைகள் மூலமாக பெண்ணை மயக்கியுள்ளான். மேலும், கணவனை இழந்து இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்த சர்மிளா எதையும் பொருட்படுத்தாது டிக் டாக் செயலியில் மூழ்கி கிடந்துள்ளார்.  

@umarsherifthambik

♬ original sound  - Umar Sherif Thambikk

ஆன்லைனில் பொருட்கள் விற்பனை செய்து வந்த சர்மிளா, மனத்திருப்திக்காக டிக்டாக் செயலிக்கு வந்த நிலையில், உமரின் அன்பான வார்த்தைகளில் அதிகளவு சிக்கியுள்ளார். இதையடுத்து தனக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் இருப்பதை மறைத்த உமருடன், சர்மிளா திருமணம் செய்யாமலேயே ஒன்பது மாதம் குடும்பம் நடத்தியுள்ளார். 

@umarsherifthambik

♬ original sound  - Umar Sherif Thambikk

மேலும், இருவரும் திருமணம் செய்யாமலேயே 9 மாதங்கள் வசித்து வந்த நிலையில், திருமணம் செய்து கொள்ளக்கூறி சர்மிளா வற்புறுத்தினார். இதனையடுத்து, 10 சவரன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் கொடுத்தால் திருமணம் செய்வேன் என்று கூறவே, சர்மிளாவும் கொடுத்துள்ளார். பணம் மற்றும் நகையை பெற்றவுடன் உமர் சர்மிளாவை கைவிட்டு தப்பி சென்றுள்ளான்.  

@umarsherifthambik

bayam nallaave theriyuthu..... enna kevala padithi asinga paduthanum nu ninaichu ungala neengle.....

♬ original sound - umarsherifthambik

இந்த நிலையில், இரண்டு குழந்தைகளின் தந்தையான உமர், தனக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருப்பதை மறைத்து சர்மிளாவின் உல்லாசமாக வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது. உண்மையை உணர்ந்த சர்மிளா கொடுத்த நகை மற்றும் பணத்தை திருப்பி கேட்கவே, நாம் இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படத்தை இணையத்தில் விட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளான். 

@umarsherifthambik

oruthan amaithiyaa poraannaa bayanthu illa...athukku pala kaaranam irukku....

♬ original sound - umarsherifthambik

இதனையடுத்து இதுகுறித்து சர்மிளா ஈரோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவரது புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, உமரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண்கள் இணையத்தில் காமுக பொறுக்கிகள் பதிவு செய்யும் வெறும் பாடலை நம்பி ஏமாறாமல் சுதாரிப்புடன் இருப்பதே இது போன்ற பல விபரீத செயல்களில் இருந்து காக்கும் என்பதே நிதர்சனம்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

erode culprit cheated girl using tic tok


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->