ஹலோ ட்ரைவர்.. கரும்பு வச்சிருக்கீங்களா? பசிக்குது..! சீ வெறும் கத்தரிக்காய் லோடு..!! பண்ணாரியில் யானை அட்ராசிட்டி.!! - Seithipunal
Seithipunal


யானையொன்று கத்தரிக்காய் லோடு ஏற்றி வந்த சரக்கு வேனை நிறுத்தி, கரும்பு இருக்கிறதா? என சோதனை செய்த நிகழ்வு நடந்தது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் பண்ணாரி காவல் சோதனை சாவடி அருகே கத்தரிக்காய் லோடு ஏற்றி வந்த சரக்கு வாகனத்தை இடைமறித்த யானை, அதில் சாப்பிட கரும்புகள் ஏதும் இருக்கிறதா? என சோதனையிட்டது. 

வாகன ஓடியோ யானை நம்மை தாக்க வருகிறது என்ற அச்சத்தில், வாகனத்தை விட்டு தலைதெறித்து ஓடினார். அவ்வழியாக வந்த வாகனங்கள் ஹாரனை சப்தமாக எழுப்பியும், கரும்பு ஆவலில் யானை சரக்கு வாகனத்தை குலுக்கி பார்த்து சோதனை செய்தது. 

பின்னர், அதில் ஏதும் இல்லை என்பதால் விரக்தியில் நின்ற நிலையில், யானையை விரட்ட அருகேயிருந்த சோதனை சாவடி அதிகாரிகள் முயற்சிக்க, யானை பிளிறிட்டு அவர்களை விரட்ட தொடங்கியது. "எங்கேயோ செல்லும் மாரியாத்தா, எம் மேலே வந்து ஏறு ஆத்தா" என்ற கிராம சொல்லுக்கு ஏற்ப, யானையை விரட்ட முயன்ற அதிகாரியும், வாகன ஓட்டியும் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். 

இந்த பரபரப்பான சூழலின் போது எதிர்திசையில் வந்த கார் மட்டும், யானை சாலையை கடந்து சென்றதும் ஆக்சிலரேட்டரை அழுத்திப்பிடித்து அங்கிருந்து தப்பி பயணித்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. 

பொதுவாக சத்தியமங்கலம் பகுதியில் யானைகள் லாரிகளில் ஏற்றி செல்லும் கரும்புகள் எங்கேயும் கீழே விழுந்து இருந்தால் அதனை எடுத்து சென்று ஓரமாக அமர்ந்து அமைதியாக சாப்பிடும். சில நேரம் பசி அதிகமாக இருக்கும் போது, வாகனங்களை இடைமறித்து நிறுத்தி, அதில் உள்ள கரும்புகளை மட்டும் சாப்பிட்டுவிட்டு செல்லும். இது இயல்பாக அங்கு நடக்கும் ஒன்று தான் என்று பூர்வீகமாக அங்கு வசித்து வரும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode Bannari Check Post Elephant Raid and Search Sugarcane on Load Lorry and Vehicles


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->