ஈரோடு அரசு கலைக்கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியம்.. கனவை இழந்து, கடனை அடைக்க கூலித்தொழிலாளியாக மாணவி.! - Seithipunal
Seithipunal


விவசாயம் படிக்க ஆசைப்பட்ட ஏழை மாணவிக்கு, அரசுக் கல்லூரி இழைத்த மாபெரும் துரோகம் குறித்த தகவல் வெளியாகி கண்ணீரை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் மங்கலுரு வீ.சித்தேரி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி சின்ன பொண்ணு. இந்த தம்பதிக்கு துரைராஜ் என்ற மகனும், சத்யா தேவி என்ற மகளும் உள்ளனர். ராமசாமி - சின்ன பொண்ணு புதைவட கேபிள் பதிக்கும் ஒப்பந்ததாரரிடம் தினக்கூலியாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் ஈரோட்டில் தங்கி பணியாற்றி வரும் நிலையில், மகன் துரைராஜை தங்களால் முடிந்த அளவு டிப்ளமோ வரை படிக்க வைத்துள்ளனர். 

மகள் சத்தியா தேவி நயினார்பாளையத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயின்று வந்த நிலையில், இவருக்கு விவசாயத்தில் பட்டப் படிப்பை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்துள்ளது. ஆனால், சரியான வழிகாட்டுதல் கிடைக்காமல், ஈரோட்டில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் மைக்ரோபயாலஜி பாடப் பிரிவை எடுத்து படிக்குமாறு கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. 

மாணவி சத்யா தேவியும் தன் மனதை மாற்றிக்கொண்டு, மைக்ரோபயாலஜி பாடப்பிரிவில் சேர்ந்த நிலையில், கல்லூரி தொடங்கும் போது மைக்ரோபயாலஜிக்கு பதிலாக பயோகெமிஸ்ட்ரி பாடப்பிரிவில் அட்மிஷன் போட்டுவிட்டதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து மாணவி கேட்ட போது, கல்லூரி நிர்வாகம் உரிய பதில் அளிக்காத நிலையில், நாங்கள் கொடுத்த பாடம் படிக்க வேண்டும் என்றால் படியுங்கள், இல்லை என்றால் உன் இஷ்டம் என்று கூறியுள்ளது. இதனையடுத்து, அதனையும் ஏற்றுக்கொண்ட மாணவி சுய பிரிவில் (Self) பயோ கெமிஸ்ட்ரி படித்த நிலையில், பெற்றோர் கடன் வாங்கி கல்லூரி கட்டணமாக முதல் வருடத்திற்கு ரூ.22,000, பேருந்து கட்டணம் ரூ.7 ஆயிரம், தேர்வு கட்டணம் ரூ.2,000 என செலுத்தியுள்ளனர். 

முதல் பருவ நிலை தேர்வையும் எழுதி முடித்த நிலையில், இன்னும் முடிவு கிடைக்கவில்லை. கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, பன்னிரண்டாம் வகுப்பில் வேதியியல் படிப்பில் படிக்காத நிலையில், இங்கு பயோ கெமிஸ்ட்ரி படிப்பை தொடர முடியாது என்று கூறியுள்ளது. இதனால் டிஸ்குவாலிஃபிகேஷன் செய்ததாகவும் கூறியுள்ளது. இதனால் மனமுடைந்த கல்லூரி மாணவி பலமுறை கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் பலனில்லை. 

மாணவிக்கு கல்வி கட்டணத்தில் பதினோராயிரம் மட்டுமே திரும்பியும் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவியின் கல்வி மற்றும் பிற சான்றிதழையும் கையில் கொடுத்து, அவரது கனவை கானல் நீராக்கி வீட்டிற்கு அனுப்பியுள்ளது. தனது கனவும் சிதைந்து போக, வேறு வழியின்றி பெற்றோர் வாங்கிய கடனை அடைக்க கேபிள் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். 

மேலும், இது குறித்து மாணவி கூறுகையில், நான் அக்ரி படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். எங்களுக்கு வழிகாட்டுதல் இல்லாததால், ஈரோடு கலை கல்லூரியில் சேர்ந்தேன். பெற்றோர் கடன் வாங்கி சேர்த்து ஒரு செமஸ்டர் எழுதிய நிலையில், கல்லூரி நிர்வாகம் ஏதேதோ காரணம் கூறி என்னை நிறுத்தியுள்ளது. முடியாது என்றால் முதலிலேயே நிறுத்தியிருந்தால், அடுத்த வருடம் படித்திருப்பேன். அல்லது வேறு கல்லூரிக்கு சென்று இருப்பேன். 

என்னைப் போன்று நான்கு கல்லூரி மாணவிகளும் நிறுத்தப்பட்டுள்ளனர். பெற்றோர் எனக்காக வாங்கிய கடனை அடைக்க அம்மாவுடன் தற்போது கூலி வேலை செய்து வருகிறேன். சாலையை உடைக்க பயன்படுத்தும் பிரேக்கர் 15 கிலோ எடை இருக்கும். இதில் பயங்கரமான அதிர்வு வரும். இதையெல்லாம் பார்த்தால் வாங்கிய கடனை அடைக்க முடியாது என்பதால், வேறு வழியின்றி இந்த வேலை செய்து வருகிறேன். எனது அக்ரி படிப்பு கனவாகவே போய்விட்டது. என்று கதறி அழுதார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode Arts and Science College Girl Future Dream Spoiled


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->