இப்படியும் ஒரு சுயேச்சை வேட்பாளர்.. வாக்குறுதியால் வெதும்பிப்போன மக்கள்.! - Seithipunal
Seithipunal


அந்தியூர் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியுள்ள எம்.ஜி.ஆர் ரசிகர் ஒருவர், வாக்காளர்களை கவர சர்ச்சையான வாக்குறுதியை தெரிவித்துள்ளார். 

ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் தொகுதியில் கடந்த 40 வருடமாக சுயேட்சையாக களம் இறங்கும் வேட்பாளர் சேக் தாவூத். இவர் தன்னை எம்.ஜி.ஆர் ரசிகர் என்று கூறிக் கொள்வார். இவர் கடந்த 40 வருடங்களாக தான் பல முறை தேர்தலில் போட்டியிட்டது குறித்து முதலில் நெகிழ்ச்சியாக தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார். 

பின்னர், 40 வருடங்களாக தனக்கு வாய்ப்பளிக்காத உள்ளூர் வாக்காளர்களை கடுமையாக விமர்சித்தார். மேலும், நாட்டில் விவசாயிகள் என்ற பெயரில் சலுகை பெறுவோர் ஏமாற்றுவதாக குற்றம் சாட்டிய நிலையில், பெண்களுக்கு மாதம் ரூபாய் 25 ஆயிரம் தரப்படும் என்றும், இலவசமாக செல்போன் தரப்படும் எனவும் தெரிவித்தார். 

இது மட்டுமல்லாது பாண்டிச்சேரியிலிருந்து உடலின் ஆரோக்கியத்தை வளர்க்க, இளமையைக் கூட்டும் வகையில் ஒரிஜினல் மதுபானம் வாங்கி வந்து 18 வயது இளைஞர்களுக்கு தருவேன் என்றும் தெரிவித்தார். இவரது பேச்சு மதுபான விற்பனையை எதிர்க்கும் வகையில் இருந்தாலும், தேர்தல் வாக்குறுதி என்று குறிப்பிட்டு பேசியதால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

Tamil online news Today News in Tamil

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode Anthiyur Constituency Independence Candidate Election Promise TN Election 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->