இளைஞர்களே..! சென்னையில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக மாணவர்கள் பயன்பெறும் வகையில் இன்று சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்ற உள்ளது. இந்த முகாமில் 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று மாணவர்களை வேலைவாய்ப்புக்கு தேர்வு செய்யவுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலைவாய்பினை அளிக்கக்கூடிய முன்னணி நிறுவனங்களும் இந்த முகாமில் பங்கேற்கின்றன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பணிநியமன ஆணைகளை வழங்கவுள்ளார்.

இதற்கான விண்ணப்பப் படிவம் www.tnou.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு , தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக மாணவர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு பிரிவின் இயக்குநரை 9791234586, 8667511342 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Employment camp in Chennai saidapet open University


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->