இளைஞர்களே ரெடியா.. அரியலூர் மாவட்டத்தில் இன்று வேலை வாய்ப்பு முகாம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தபடாமல் இருந்தது. அதன் காரணமாக, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வந்தனர்.

இதனையடுத்து தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2 முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்கின்றனர்.

இந்த நிலையில் அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் (தமிழ்நாடு கிராமப்புற இளைஞர்கள் திறன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு (DDU-GKY)  திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் இளைஞர் திறன் திருவிழா வரும் இன்று (டிசம்பர் 23) அன்று நடைபெறுகிறது.

அந்த வகையில் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இன்று (டிசம்பர் 23ம் தேதி) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை) நடைபெற உள்ளது.

இந்த முகாமில் 5-ஆம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ, இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் படித்த வேலைவாய்ப்பற்ற 18 முதல் 45 வயது வரை உள்ள இளைஞர்கள் ஆண், பெண் என அனைவரும் கலந்து கொண்டு, பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பினை பெற்று பயன்பெறலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Employment camp in Ariyalur district in today


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->