ஈரோட்டை மையமாக கொண்டு மீண்டும் தமிழகம் முழுவதும் அரங்கேறும் சதிவேலை..? காவல்துறை வெளியிட்ட அவசர எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில், ரிசர்வ் வங்கி அனுமதி பெறாமல், முறையான பதிவு இல்லாமல் நடத்தப்படும் போலி நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வதைத்தவிர்க்க வேண்டும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஈரோடு மாவட்டத்தில், ஆட்டுப் பண்ணை திட்டம், நாட்டுக் கோழி பண்ணை திட்டம், ஈமு கோழித் திட்டம், கொப்பரை தேங்காய்த் திட்டம், நகைச் சீட்டு, பணம் மற்றும் தங்க முதலீடு திட்டங்கள், வாரச்சீட்டு, மாதச் சீட்டு, தினசரி சீட்டு என்ற பெயரில் அங்கீகாரம் பெறாத போலி சீட்டு நிறுவனங்கள் அதிகவட்டி தருவதாகக் கூறுவதை நம்பி பலர் கோடிக்கணக்கில் தங்கள் பணத்தை முதலீடு செய்கின்றனர்.

மேலும், ரிசர்வ் வங்கி அனுமதி பெறாமல், முறையான பதிவு இல்லாமல் நடத்தப்படும் போலி நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

குற்றப்பின்னணி கொண்டவர்கள்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் என்பதைபொதுமக்கள் உணர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பேராசைப்பட்டு இவர்களிடம் முதலீடு செய்பவர்கள் ஏமாறும்போது அதை காவல் துறையினர் மீட்டுத்தர இயலாது.

முதலீடு செய்யும்போது அந்த நிறுவனம் குறித்து முழு விவரம் அறிந்து முதலீடு செய்யவேண்டும்.

எனவே, அரசு நிதி நிறுவனங்கள், அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில், சேமிப்பு, முதலீடு செய்தால் ஏமாறாமல் பாதுகாப்புடன் இருக்கலாம் என்பதை பொதுமக்கள் மனதில் கொள்ள வேண்டும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அளவில் மக்களை கதிகலங்க செய்ய ஈமு கோழி மோசடி முதன்முதலாக ஈரோட்டை மையமாக கொண்டு தான் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Emphasizing-the-arrest-of-the-fraudulent-ownerPublic


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->