நாளைக்கு ஒரு குண்டூசிக்கு கூட வாய்ப்பில்ல.. 100 மீட்டருக்கும் சுற்றி வளைக்கப்படும் - தேர்தல் ஆணையம் வெளியிட்ட பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலின் போது பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன.

இதற்காக 45 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள் ளன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. 15 ஆயிரத்து 904 பேர் வாக்குகள் எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனர்.

வாக்கு எண்ணிக்கையின் போது ஒரு மையத் தில் ஒரு வேட்பாளருக்கு 16 முகவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கூர்மையான பொருட் களை கொண்டு வர அனுமதி கிடையாது.

காகிதம், பென்சில் ஆகிய பொருட்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு” என்றார்.முகவர்களுக்கு தேவையான அனைத் தும் மையத்தில் 100 மீட்டர் சுற்றளவில் கிடைக் கும்.

அதைத் தாண்டி வெளியில் செல்லும் முகவர்கள் மீண்டும் உள்ளே அனுமதிக்கப் பட மாட்டார்கள். மேலும் வாக்கு எண் ணிக்கை மையத்தினுள் சில அதிகாரிகள் தவிர்த்து மற்றவர்கள் அலைபேசி பயன் படுத்த அனுமதி இல்லை.

ஒவ்வொரு சுற்றுக்கு பின்னும் முடிவுகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப் பட்ட 5 வி.வி.பாட் எந்திரங்கள் கடைசியாக எண்ணப்படும்.

அதுமட்டுமல்லாமல் ஏற்கெனவே தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட 44 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள், வி.வி.பாட் எந்திரங்கள் மூலம் மட்டுமே எண்ணப்படும்.

வாக்குப் பதிவு எந்திரம் பழுது காரணமாக வாக்குகள் எண்ண முடியாத நிலை ஏற்பட்டால், அதற்கான வி.வி.பாட் எந்திரங்கள் எண்ணப் பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பே, அதிகாரிகள், முகவர்கள் என அனைவரும் உள்ளே அனுமதிக்கப்பட்டு அவரவரது இடங்களில் அமரவைக்கப்படுவர் எனவும் அவர் கூறினார்.ஒரு தொகுதியில் பதிவான அனைத்து தபால் வாக்குகளும் ஒன்றாக சேர்த்து மொத்தமாக எண்ணப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ELECTION RULES TO BE INTRODUCED


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->