அந்த சர்ச்சைக்குரிய பாராளுமன்ற தொகுதியில் மறுவாக்குப்பதிவு?! மனுதாரரின் வழக்கு மீது உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு?!  - Seithipunal
Seithipunal


மதுரை ஐகோர்ட்டு கிளையில் மதுரை மக்களவை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வக்கீல் பசும்பொன் பாண்டியன் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அதில்," நான் மதுரை மக்களவை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டேன். கடந்த ஏப்ரல் 18-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 

மதுரை மருத்துவக் கல்லூரி அரங்கில் பதிவான ஓட்டுப்பெட்டிகள் அனைத்தும் வைக்கப்பட்டுள்ளது. அது 3 அடுக்கு பாதுகாப்பு கொண்ட இடம். கடந்த வாரம் சட்ட விரோதமாக பெண் அதிகாரி மற்றும் ஊழியர்கள் 3 பேர் உள்ளே நுழைந்துள்ளார். மேலும், அங்கு 3 மணி நேரம் உள்ளே இருந்துள்ளனர்.

இதுகுறித்து விசாரணையில், சம்பந்தப்பட்ட அதிகாரி மற்றும் ஊழியர்கள் மீது சஸ்பெண்டு நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை மூடி மறைக்க தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தேர்தல் அலுவலர்கள் தொடர்ந்து முயற்சி செய்கின்றனர். இது சட்டம் - ஒழுங்கு சம்பந்தப்பட்டது. இதுக்குறித்து போலீஸ் கமி‌ஷனர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Image result for madurai high court seithipunal

மதுரை பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்து விட்டு மறு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்.முழுமையான விசாரணை நடத்தி மதுரை வாக்கு எண்ணும் மையத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து  சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த மனு விசாரணைக்கு வர இருக்கிறது. 

மனுதாரர் குறிப்பிட்டுள்ளதை போல அந்த தொகுதிக்கு மறுதேர்தல் நடத்தப்படுமா? அல்லது உயர்நீதிமன்றதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுமா? இதுகுறித்து தேர்தல் ஆணையம் என்ன முடிவெடுக்க இருக்கிறது என்று விரைவில் தெரிவிக்கப்படும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

election issue in madurai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->