மாவட்டத்தில் ரத்து செய்யப்பட்ட தேர்தல், மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


வேட்புமனுக்கள் திரும்ப பெறப்பட்டதால் இரண்டு இடங்களில் தேர்தலே ரத்தாகியுள்ளது. 

இதுகுறித்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சித் அமைப்புகளுக்கான தேர்தலில் 7 ஆயிரத்து 42 வேட்பாளர்கள் போட்டியிடுவதாகவும், அதில் 11 கிராம ஊராட்சித் தலைவர் 490 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என 501 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இரண்டு இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் தங்களது மனுக்களை திரும்பப் பெற்றதால் அந்த இரண்டு பகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும், 1704 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவுகள் நடைபெற்று, பதிமூன்று இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தெரிவித்தார்.

தேர்தலுக்காக வேட்பாளர் சின்னங்கள் பொறிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகள் அந்தந்த வார்டு வாரியாக பிரித்து வைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் பார்வையிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

election cancel in tirupur district two place


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->