மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து எப்போது? முதலமைச்சர் தகவல்! - Seithipunal
Seithipunal


மாநிலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து எப்போது தொடங்கப்படும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.

கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்டந்தோறும் ஆய்வு செய்து வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் இந்த ஆய்வுக்கு பின் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து எப்போது திறக்கப்படும் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இப்போதைக்கு மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்துக்கு சாத்தியமில்லை என்றார்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இரு மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத சூழலிலும் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதாக தெரிவித்தார். பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் தான் கொரோனா கட்டுக்குள் வந்து இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். 

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நிறைவுபெற்ற திட்டங்களை துவக்கி வைத்தார் அவர் புதிய கட்டிடங்களையும் திறந்து வைத்தார் சுமார் 22 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்கினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edppadi palanisami says about state to state bus transport


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->