காவல்நிலைய வாசலில்., 2 மணிநேரம் நடன அரங்கேற்றம் நிகழ்த்திய இளம்பெண்.!  - Seithipunal
Seithipunal


எடப்பாடி காவல் நிலையம் முன்பு பெண் ஒருவர் குத்தாட்டம் போட்டு ஆடத்தொடங்கியது, போலீசார் மற்றும் பொதுமக்களுக்கும் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் எடப்பாடி காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு நேற்று சுமார் ஒரு 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் புகார் அளிக்க வந்தார். அங்கு ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த நபர்களுடன் போலீசார் விசாரணை செய்த நிலையில், இந்த இளம்பெண்ணிடம் இந்த விசாரணையை மேற்கொள்ளவில்லை.

இதனால் பொறுமை இழந்த அந்த பெண் திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில், காவல் நிலையத்தின் வாசலில் குத்தாட்டம் போட்டு நடனம் ஆட தொடங்கினார். இதனால் போலீசார் மற்றும் அங்கு காத்திருந்த பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஒரு சில பெண்கள் அந்த பெண்ணிடம் 'இது காவல் நிலையம், இங்கு ஆடக்கூடாது' என்று அறிவுறுத்தினர். அதற்கு அந்த பெண், 'உனக்கும் பிடித்திருந்தால் ஓரமாக நின்று வேடிக்கை பார். இல்லை என்றால் போய்க்கொண்டே இரு' என்று சொல்லிவிட்டு தொடர்ந்து ஆட தொடங்கினார்.

இப்படியாக சுமார் 2 மணி நேரம் தொடர்ந்து திரைப்பட பாடல்களை பாடிக்கொண்டே அவரின் நடன அரங்கேற்றம் அரங்கேறிக் கொண்டிருந்தது. போலீசார் அந்த பெண்ணை ஏதும் கண்டு கொள்ளவில்லை.

ஒரு வழியாக அந்த பெண் ஆடிய கலைப்பில், ஆடி முடித்து விட்டு அந்த இடத்தை விட்டு புறப்பட்டு சென்றார்.

இதுகுறித்து பொலிஸார் தெரிவிக்கையில், கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்த அந்த பெண் அடிக்கடி பிரச்சனை என்று கூறி, காவல் நிலையத்தில் புகார் அளிக்க வருவதும், அவரின் அந்த பொய்யான ஒரு புகாரை ஏற்காத பட்சத்தில் இதுபோல் நடனமாடி செல்வதும் வாடிக்கையாக நிகழ்வதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EDAPPADI WOMAN DANCE IN POLICE STATION


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->