சட்டப்பேரவையில் தண்ணீர் பிரச்சனை.? முதல்வர் கேட்ட கேள்வியால் நிலைகுலைந்த திமுக.!!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என கூறி திமுக தலைவர் ஸ்டாலின் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துப் பேசினார்.

அப்போது அவர், "தமிழகத்தில் மழை பொய்த்து விட்டதால் தான், நிலத்தடி நீர் கீழே சென்று விட்டது. முடிந்த அளவு தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைத்து வருகின்றோம். மக்களவை தேர்தலின்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்படும் என ராகுல் காந்தி வாக்குறுதி அளித்து இருந்தார்.

Image result for rakul ganthi seithipunal

மேலும், காவிரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இவ்வாறு ராகுல் பேசியதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களை பார்த்து கேள்வி எழுப்பினார். 

தொடர்ந்து பேசிய முதல்வர், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தாலும், காவிரி தண்ணீரை தரவில்லை. சட்டம் மூலம் தமிழகம் தீர்வை பெற்றிருந்தாலும், ராகுல்காந்தி அதனை தடுக்க முயல்கிறார்

இந்நிலையில் கூட்டணி கட்சி என்ற முறையில் காவிரி நீரைப் பெற ஏதேனும் அவருக்கு நீங்கள் அழுத்தம் கொடுத்தீர்களா? திமுக ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்ததா? என கேள்வி எழுப்பினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edappadi speech in assembly


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->