தூத்துக்குடி விவகாரம்... காவல்துறைக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்த முதல்வர்.!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அரசரடி தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (58), அவரது மகன் பென்னிக்ஸ் (31) கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தது தொடர்பாக காவல்துறையினர் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று உள்ளனர். மேலும், காவல் துறை அதிகாரிகள் விலையுயர்ந்த அலைபேசியை இலவசமாக கேட்டதாகவும் தெரியவருகிறது. காவல் நிலையத்தில் மகன் பென்னிக்ஸ் முன் நிலையில் அவரது தந்தை ஜெயராஜை காவல்துறையினர் அடித்ததாக கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த பென்னிக்ஸ்க்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே, காவல் துறையினர் பென்னிக்ஸை கட்டி வைத்து அடித்ததாகவும், எல்லாவற்றையும் தாண்டி அவரது ஆசன வாய் உள்ளே லத்தியால் குத்தி காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த சித்திரவதைகளுக்கு பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்து கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். சிறையில் பென்னிக்ஸை சந்திக்க சென்ற அவரது நண்பர்களிடம் போலீசார் தாக்கியதில் தனது ஆசன வாயில் இருந்து இரத்தம் வந்து கொண்டே இருப்பதாக பென்னிக்ஸ் கூறியதாக தெரிகிறது. 

இதனிடையே தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. மேலும், ஜெயராஜின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபடவே, காவல்துறை அதிகாரிகளின் கொடூரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பலகட்ட பேச்சுவார்த்தை சமாதானத்திற்கு பின்னர் உடலை பெறவும், பிரேத பரிசோதனை மேற்கொள்ளவும் உறவினர்கள் ஒப்புக்கொண்டனர். 

இவர்களின் குடும்பத்திற்கு நேற்று தமிழக அரசு சார்பாக ரூ.10 இலட்சம் நிதிஉதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி ஆகிய நிவாரணத்தை முதல்வர் அறிவித்தார். மேலும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், தக்க தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவித்தார். இந்நிலையில், இன்று கோவை மாவட்டத்திற்கு பயணம் செய்துள்ள முதல்வர் செய்தியாளர்களை சந்தித்தார். 

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தூத்துக்குடி கொலை விஷயம் தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்விகளை எழுப்புகையில், " காவல்துறை அதிகாரிகள் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கனிவோடு நடந்துகொள்ள காவல் துறை உயர் அதிகாரிகளிடம் எடுத்துரைத்து கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது. தவறு இழைத்தவர்களுக்கு கட்டாயம் தண்டனை வழங்கப்படும் என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edappadi Palanisamy warn Police about Thoothukudi Murder Issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->