குற்றம் சுமத்திய ஸ்டாலினின் அறியாமையை, அரசாணையில் அம்பலப்படுத்திய இபிஎஸ்! - Seithipunal
Seithipunal


மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய டுவிட்டரில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கொடுத்த நிதியினை நிர்வாகம் பயன்படுத்த மறுத்து இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது என்றும். அரசியல் சூழ்ச்சி செய்ய இது நேரம் அன்று என்றும், இப்பிரச்சினைகளை  மாண்புமிகு முதலமைச்சர் கவனிக்கவும் எனவும் பதிவிட்டுள்ளார். 

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் வழிமுறைகளின்படி, சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தான், சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரையின்படி வரையறுக்கப்பட்டுள்ள பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியும், இதை அறியாமல் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் ட்விட்டரில் விதிமுறைகளின்படி செய்ததை குறை கூறியுள்ளார். 

ஏற்கனவே தொற்றுநோய் தடுப்பு பணிகள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு அந்த சட்டமன்ற உறுப்பினர்கள் விரும்பினால் ரூபாய் 25 லட்சம் அந்தந்த தொகுதிகளில் செலவு செய்ய அனுமதிக்கப் பட்டுள்ளது. இது தொடர்ந்து செயல்படுத்தப்படும். மேலும் தொற்றுநோய் பரவுவதை தடுக்க மாவட்ட மற்றும் மாநில அளவில் மருத்துவ சிகிச்சைக்கான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வாங்குவதற்கும் தடுப்பு நடவடிக்கைகளும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் மேம்பாட்டு நிதியிலிருந்தும்  தலா ஒரு கோடி ரூபாய் மாநில அளவில் ஒருங்கிணைத்து தமிழ்நாடு அரசு பயன்படுத்திக் கொள்ள நான் உத்தரவிட்டுள்ளேன்  என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edappadi Palanisamy replies to mk stalin


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->