விபரீதத்தை புரிந்து மக்கள் செயல்படுங்கள்.. உச்சகட்ட எச்சரிக்கை விடுத்துள்ள முதல்வர்..!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது ஏப்ரல் 14 ஆம் தேதி அதிகாலை 5 மணிவரை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீடுகளில் இருக்க அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே வரவேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. தேவையற்று மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அதிகளவு அனாவசியமாக வெளியே சுற்றி வருகின்றனர். மேலும், இளைஞர்கள் அனாவசியமாக சுற்றி வருகின்றனர். 

இந்த நிலையில், அடுத்தகட்ட தேவையான நடவடிக்கை குறித்து தமிழக முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். இவர்கள் காலை முதலாகவே ஆலோசனையை மேற்கொண்டு வந்த நிலையில், சென்னையில் உள்ள மருத்துவமனையை முதல்வர் பார்வையிடவிருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், டி.எம்.எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், அரசு அனைத்து தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது. தனிமைப்படுத்தல் மற்றும் வெளியே சுற்றாமல் இருத்தலே முக்கியம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். தேவையற்று வெளியே சுற்ற கூடாது. 

கிருமி நாசினி மூலமாக நோய் பரவுவதை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 

இந்த கொரோனா வைரஸ் என்பது கொடிய நோய்.. மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். 277 பேர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

தனிமைப்படுத்தும் நபர்கள் வெளியே வர கூடாது. பிறரும் அவரை காண செல்ல கூடாது. நோயின் அறிகுறி தென்படும் பட்சத்தில் தேவையான சிகிச்சை அளிக்கப்படும். மருத்துவ கட்டுப்பாட்டு அரை 24 மணிநேரம் செயல்பட்டு வருகிறது. கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டால் தேவையான உதவி செய்யப்படும். 

அவசர கால அவசர ஊர்திகள் 200 அதிகப்படுத்தப்பட்டு பணியை துவங்கியுள்ளது. டயாலிசிஸ் சிகிச்சை பெறுபவர்கள் அவசர ஊர்திக்கு தொடர்பு கொண்டால், அவர்களே வந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்வார்கள். பின்னர் சிகிச்சை முடிந்தவுடன் அவர்களே இல்லத்தில் விட்டுவிடுவார்கள். 

தடை உத்தரவு உங்களையும், உங்களின் குடும்பத்தையும், நாட்டையும் பாதுகாக்கவே எடுக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.. கரோனா இரண்டாம் கட்டத்தை நோக்கி பயணிக்கிறது.. இதன் காரணமாகவே அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. நோய்க்கு சிகிச்சை அளிக்க முடியும் என்ற கருவிகள் உள்ள மருத்துவமனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edappadi palanisamy press meet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->