#Breaking: மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை... முதல்வர் பேச்சு விபரம்.!! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் நபர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் வணக்கங்கள்.. கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு முறை ஆட்சியர்களுடன் மேற்கொண்ட ஆலோசனைக்கு பின்னர் வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இந்தியா முழுவதிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. 

ஏற்கனவே வெளிமாநிலம் மற்றும் வெளிநாடு மூலமாக ஏற்பட்டுள்ள தொற்று குறைக்கப்பட்டு இருந்தாலும், சென்னை மாநகரில் மக்கள் தொகை மற்றும் குறுகிய பகுதிகள் காரணமாக கொரோனா அதிகாமாகியுள்ளது. அரசு பல நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. வல்லரசு நாடுகளில் உயிரிழப்பு அதிகமாக இருக்கும் சூழலில், தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை விகிதம் குறைவாக இருக்கிறது. 

மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மக்கள் அரசின் நடவடிக்கையை கேட்டு நடக்க வேண்டும். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்படும். உரிய மருந்து இல்லாத சூழலிலும், சிகிச்சைகள் முறையாக வழங்கப்பட்டு பலரும் காப்பாற்றப்பட்டுள்ளனர். மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைப்படி தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு தேவையான சமூக இடைவெளி, சானிடைசரால் கை, கால்கள் கழுவதால் போன்றவை கூறப்பட்டுள்ளது. 

நோயின் அறிகுறி தென்படும் பட்சத்தில், மருத்துவமனைக்கு சென்று உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும். நோய் அறிகுறி முற்றியபின் மருத்துவமனைக்கு சென்றால் அது தோல்வியில் தான் முடியும். தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. சளி, காய்ச்சல், தொண்டை வலி போன்ற அறிகுறி இருப்பின், மருத்துவமனைக்கு சென்று கட்டாயம் சோதனை செய்ய வேண்டும். 3 முறை மருத்துவ ஆலோசனை கூட்டமும், 5 முறை பிரதமருடன் ஆலோசனை கூட்டமும் என்று பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றுள்ளது.

170 வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். வெளிமாநில மற்றும் வெளிநாடுகளை சார்ந்த தமிழர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரத்திற்கும் அதிகமான வெளிநாடு வாழ் தமிழர்கள் தமிழகத்திற்கு வந்துள்ளனர். கடைகள் மற்றும் தொழிற்சாலைகள் இயங்க நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. களப்பணியாளர்கள் பாதுகாக்கப்பிற்கு தேவையான உபகரணம் வழங்கப்பட்டுள்ளது. களப்பணியாளர்கள் எதிர்பாராத விதமாக உயிரிழக்கும் பட்சத்தில், அவர்களின் குடும்பத்தினருக்கு நிதிஉதவி மற்றும் நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்பட்டுள்ளது. 

ஜூன் மாதத்திற்க்கான ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.1000 ரொக்கமாக நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. வெளிமாநில தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. பட்டாசு தொழிலாளர்கள் மற்றும் தீப்பட்டி தொழிலாளர்கள் போன்றோருக்கும் நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. அம்மா உணவகம் மற்றும் சமுதாய கூடங்கள் மூலமாக பல ஏழை எளிய மக்கள் மற்றும் ஆதரவற்றோர் போன்றோருக்கு உணவுகள் வழங்கப்பட்டுள்ளது. 

வெளிநாடு நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்க பிரத்தியேக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. சொத்துவரி மற்றும் குடிநீர் வரி போன்றவை செலுத்த காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 70 கொரோனா பரிசோதனை மையம் இருக்கிறது. நாளொன்றுக்கு சுமார் 12 ஆயிரம் சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. மக்களுக்கு தேவையான பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. காய்கறிகளின் விலை குறைந்தளவே இருக்கிறது. தமிழகத்தில் 3371 வென்டிலேட்டர்கள் இருக்கிறது. 

தடை செய்யப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இல்லங்களில் நேரடியாக அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள காரணத்தால் அரசு அதிகாரிகள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றி வந்த காரணத்தால், தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் இருக்கிறது. நோய் பரிசோதனை அதிகமாவது, பாதிப்பு அதிகமாவது பிரச்சனை இல்லை. நோயை எவ்வுளவு விரைவாக கண்டறியும் பட்சத்தில், எளிதில் பாதிக்கப்பட்ட நபரை குணப்படுத்தலாம். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edappadi palanisamy meeting with district collector press meet


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->