கிருஷ்ணகிரி, தருமபுரி மக்களுக்கு கொண்டாட்ட அறிவிப்பு.. தமிழக முதல்வர் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " கொரோனா வைரஸ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குறைந்தளவே இருக்கிறது. சுமார் 700 க்கும் அதிகமானோர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 100 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று இல்லங்களுக்கு திரும்பியுள்ளனர். பலி எண்ணிக்கையும் குறைவு.. பிற மாவட்டங்களை ஒப்பிடுகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் குறைந்தளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டள்ளது. 2 கொரோனா வைரஸ் பரிசோதனை மையம் இரண்டு உள்ளது. நோய்த்தடுப்பு நடவடிக்கையில் நோய் அறிகுறி இருக்கும் நபர்களை கண்டறிய காய்ச்சல் அறியும் குழு செயல்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடு வீடாக சென்று பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு தேவையான அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

அரசின் அறிவுறுத்தலின் படி மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்பு, காவல் துறையினரால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குடும்ப அட்டைக்கு விலையில்லா அரசி, பருப்பு மற்றும் எண்ணெய் வழங்கப்பட்டுள்ளது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் நிதிஉதவி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவ உபகரணங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு தேவையான அளவு வழங்கப்பட்டுள்ளது. 

ஓசூரில் எலக்ட்ரிக் பைக் மற்றும் பேட்டரி உற்பத்தி செய்யும் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 6 சிப்கோ நிறுவனங்கள் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றின் வெள்ளநீரை சேகரிக்க புதிய கால்வாய் வெட்டி வறட்சி பகுதிகள் பலன் பெற திட்டம் தீட்டப்பட்டு, ரூ.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ.50 கோடி இன்னும் சில நாட்களில் ஒதுக்கீடு செய்யப்படும். இதனால் தருமபுரி மாவட்டம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் பலன் பெறுவார்கள் " என்று கூறினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edappadi Palanisamy Latest Press meet 15 July 2020


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->