தூத்துக்குடி: குடும்பத்தின் எதிர்காலத்தை நினைத்து வருந்திய மாற்றுத்திறனாளி பெண்.. முதல்வரின் நெகிழ்ச்சி செயல்..! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 11 நவம்பர் 2020 ஆம் தேதியன்று, தூத்துக்குடி மாவட்டத்திற்கு கொரோனா வைரஸ் நோய் பரவல் குறித்தும், மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்தும் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மற்றும் புதிய பணிகளுக்கான அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். 

இதற்கு முன்னதாக தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் ரூபாய் 16 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட புற்றுநோய் துறைக்கு மருத்துவ நேரியியல் கருவியை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில், மாற்றுத்திறனாளி பெண்ணொருவர் தனது கையில் மனுவை வைத்துக்கொண்டு தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் அருகே உள்ள சாலையோரத்தில் நிற்பதைக் கண்டார். 

இதனை கண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது காரை நிறுத்தி மாற்றுத்திறனாளி பெண்ணை அழைத்து அவரிடம் என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண்மணி, ஐயா நான் குட்டையாபுரம் பகுதியை சேர்ந்தவர். எனது பெயர் மாரீஸ்வரி. எனக்கு திருமணம் முடிந்து விட்டது. எனது கணவர் சின்னத்துரை தினந்தோறும் கூலி வேலைக்கு சென்று வருகிறார். எனக்கு 5 வயதில் சாலினி என்ற பெண் குழந்தையும் இருக்கிறார். 

எனது கணவரின் வருமானம் குடும்பத்தை நடத்துவதற்கு போதுமானதாக இல்லை. நான் மாற்றுத்திறனாளியாக உள்ளேன். எனது கணவர் மற்றும் எனது குடும்பத்தை காப்பாற்ற ஏதாவது ஒரு வேலை வழங்கும்படி கேட்டு மனு வழங்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்ல காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து முதலமைச்சர் பெண்ணின் மனுவை ஏற்றுக்கொண்டு, அவரை உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துவரக்கூறி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதன் அடிப்படையில் மாரீஸ்வரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்ட நிலையில், சுகாதாரத் துறையின் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வார்டு மேலாளர் பதவிக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் பெண்மணி மாரீஸ்வரிக்கு வழங்கினார். பணி நியமன ஆணையை வழங்கிய முதலமைச்சர், இந்த மாதம் மூலம் ரூபாய் 15 ஆயிரம் ஊதியம் கிடைக்கும் வகையில் பணியையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இந்த ஊழியத்தை பெற்றுக் கொண்டு குடும்பத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்ளுமாறும் அறிவுரை கூறி சென்றார். 

பணி நியமன ஆணையைப் பெற்றதும் முகமலர்ச்சியோடு மாரீஸ்வரி தனது வாழ்க்கையை உயர்த்த உதவி செய்த முதல்வருக்கு நன்றி என்று தெரிவித்தார். முதல்வரின் கனிவான செயல் மற்றும் அழகான கவனிப்பு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edappadi Palanisamy Helps Physically Challenged girl Mareeswari in Thoothukudi


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->