இன்று இரண்டு மாவட்டங்கள்.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிடப்போகும் அறிவிப்புகள்.!! - Seithipunal
Seithipunal


சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள்  குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். 

தமிழகத்தில் நேற்று கொரோனாவால் 5,981 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,03,242 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 5,870 பேர் பூரண நலன் பெற்றதையடுத்து, இதுவரையிலும் பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 3,43,930 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 109 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 6,948 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியான பட்டியலில், சென்னையில் இதுவரை1,29,247 பேருக்கு கொரோனா உறுதியாகியிருந்தது. நேற்று மேலும் 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,30,564 ஆக உயர்ந்துள்ளது.

குறிப்பாக, சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சென்றவர்கள் மூலம் கொரோனா பாதிப்பு பன்மடங்கு உயர்ந்தது. இதனால் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செல்கிறார். புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியபின், அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இன்று பிற்பகலில் தஞ்சை சென்று அங்கும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்கிறார். 

இதுவரை கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, திருச்சி, மதுரை, நெல்லை, வேலூர், திண்டுக்கல், தென்காசி, கள்ளக்குறிச்சி, கடலூர், நாகை ஆகிய மாவட்டங்களில் நேரில் சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edappadi palanisamy going to thanjavur


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->