அதிரடி முடிவெடுத்த முதல்வர்.. வலைத்தளங்களில் குவியும் பாராட்டு..!! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பத்தாம் வகுப்பு தேர்வுகள் இரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் தேர்வுகள் இல்லாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார். மேலும், மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என்றும், பதினோராம் வகுப்பு விடுபட்ட தேர்வுகள் இரத்து செய்தும், பனிரெண்டாம் வகுப்பு விடுபட்ட தேர்வுகள் சூழ்நிலைக்கேற்ப நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஜூன் 15 ஆம் தேதி முதல் ஜூன் 25 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் நடத்தப்படுவதாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வு தேதிகள் இரண்டாவது முறையாக தள்ளிவைத்து அறிவிக்கப்பட்டது. ஜூன் 15 ஆம் தேதி துவங்கும் தேர்வுகளை தள்ளிவைக்க பலதரப்பில் கோரிக்கைகள் எழுந்த வந்த நிலையில், இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். 

இந்த அறிவிப்பிற்கு பலதரப்பில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வரும் வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு தனது ட்விட்டர் பக்கத்தில் " பாமக கோரிக்கையை ஏற்று 10 மற்றும் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் அனைத்து மக்களின் அச்சத்தை அரசு போக்கியிருக்கிறது; நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது " என்று கூறியுள்ளார். 

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு தனது ட்விட்டர் பக்கத்தில், " பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, 11-ஆம் வகுப்பு விடுபட்ட பாடங்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மாணவர்கள் நலன் கருதி இந்த முடிவை எடுத்த முதலமைச்சருக்கு நன்றிகள் " என்று கூறியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் " பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்திருக்கும் அரசின் முடிவை வரவேற்கிறேன். முன்கூட்டியே இம்முடிவை எடுத்திருந்தால் மாணவர்கள், பெற்றோரின் பதற்றத்தையும், மன உளைச்சலையும் தவிர்த்திருக்கலாம். இனிமேலாவது கவனச் சிதறல்களில் ஈடுபடாமல் முழுமையாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு ஈடுபட வேண்டும் " என்று கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edappadi Palanisamy Decision about SSLC Exam greetings form social media


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->