சந்தடி கேப்பில் நடந்த சம்பவம்..? பக்கா பிளான் போட்ட எடப்பாடி - இரவோடு இரவாக தமிழகத்தில் நடந்த மாற்றம்.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் ரேசன் கடைகள் முன்பு பொங்கல் பரிசு ரூ.1000 வாங்குவதற்காக பொது மக்கள் விடிய, விடிய கொட்டும் பனியில் காத்துக் கிடந்தனர்.

தமிழக அரசு பொங்கல் திருநாளையொட்டி, அனைத்து கார்டுதாரர்களுக்கும் ரூ.1000 பரிசுத் தொகை மற்றும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்திராட்சை மற்றும் ஏலம் ஆகியவைரேசன் கடை மூலம் வழங்கப்படும் என அறிவித்தது.

இதையடுத்து, பல்வேறு நியாய விலைக் கடைகளில் பரிசுத் தொகை மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் கடந்த புதனன்று சென்னை உயர்நீதிமன்றம், வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை ரூ.1000 வழங்கக் கூடாது என உத்தரவிட்டது.

இதையடுத்து, தங்களது ரேசன் கார்டுக்கு பரிசுத்தொகை கிடைக்குமோ? கிடைக்காதோ என நினைத்து ஏராளமான பொதுமக்கள் ரேசன் கடைகள் முன்பு குவிந்தனர்.

மேலும் பரிசுத் தொகை வாங்காமல் கடையை விட்டு நகரமாட்டோம் என கடைகளை முற்றுகையிட்டனர். வெளியூருக்கு சென்றபல கார்டுதாரர்கள் பரிசுத் தொகை வாங்குவதற்காக இரவோடு, இரவாக தங்களது ஊருக்கு வந்து சேர்ந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் பொது மக்களை வரிசையாக நிற்கும்படி ஒழுங்குபடுத்தினர். இதையடுத்து உணவுப் பொருள் வழங்கல் துறையானது, இரவு முழுக்க, ரேசன் கார்டுகளை பதிவு செய்து பணம் வழங்க வேண்டுமென உத்தரவிட்டதாக கூறப் பட்டது.

அதன் பிறகு, தமிழகம் முழுவதும் ரேசன் கடை ஊழியர்கள், தங்களது வீடுகளுக்கு செல்லவில்லை. இரவு முழுவதும் ரேசன்கார்டுகளை பி.டி.எஸ் இயந்திரத் தில் பதிவு செய்யும் பணியை செய்தனர்.

குறைவான குடும்ப அட்டைகள்உள்ள ரேசன் கடைகளில் இரவோடு, இரவாக பரிசுத் தொகை வழங்கி முடிக்கப்பட்டது. அதே நேரத்தில் 700 முதல் 1500 வரை உள்ள ரேசன் கடைகளில் பரிசுத் தொகை கார்டுதாரர்களுக்கு முழுமையாக வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.

மேலும், மாவட்ட வழங்கல் துறையில் இருந்து கடைஊழியர்களிடம் பணமும் வழங்கவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் ஏராளமான ரேசன் கடைகள் முன்பு இரவு முழுவதும் கொட்டும் பனியில் பொதுமக்கள் ரூ.1000 வாங்குவதற்காக காத்திருந்தனர்.

இதே நேரத்தில் ஏராளமான நியாய விலைக் கடைகளில் முழுமையாக பரிசுத் தொகை வழங்கப்படாத நிலை உள்ளது.

தமிழக அரசு அறிவித்தபடி அனைத்து கார்டுதாரர்களுக்கும் பரிசுத் தொகை ரூ.1000, பொங்கல்பொருட்கள், இலவச வேஷ்டி - சேலை மற்றும் ஜனவரி மாதத்திற்கான ரேசன் பொருட்கள் ஆகியவற்றை வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edappadi palanisamy announcement behind election


கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
Seithipunal