ஊரடங்கு நீட்டிப்பு உண்மையா?... தமிழக முதல்வர் பரபரப்பு அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் நீர் திறந்துவைத்து தமிழக முதல்வர் பேசியதாவது, சேலம் மேட்டூர் அணை நீர்த்திருப்பு விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் எனது கனிவான வணக்கங்கள்.. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நல்லாசியுடன், டெல்டா மாவட்டத்திற்கு இன்று குருவை சாகுபடி செய்ய தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

2011 ஆம் வருடத்தில் ஜூன் 12 ஆம் தேதி கடைசியாக இதே தேதியில் நீர் திறக்கப்பட்ட நிலையில், சுமார் 9 வருடத்திற்கு பின்னர் குருவை சாகுபடி செய்ய தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் திறப்பின் காரணமாக 5.22 இலட்சம் ஏக்கர் நிலங்கள் பயன் பெறுகிறது. 

மேட்டூர் அணை 300 நாட்களுக்கு குறையாமல் 100 அடிகளுக்கு குறையாமல் இருக்கிறது. இன்றிலிருந்து 90 நாட்கள் நீர் திறந்துவிடப்படுகிறது. மேட்டூர், எடப்பாடி, சேலம், ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏரிகளுக்கு மேட்டூர் அணையில் இருந்து நீர் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. ஜனவரிக்குள் இதன் பணிகள் முடியும். 

மேட்டூர் அணையில் விவசாயிகளுக்கு வண்டல் மண் அள்ளுவதற்கு இலவச அனுமதி வழங்கப்பட்டது. 2017 ஆம் வருடத்தில் முக்கொம்பு அணை சீர் செய்யவும், கதவினை அமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. கொள்ளிடம் ஆற்றில் புதிய கதவினை ரூ.487 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது. 

டெல்டா மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணிகள் நடைபெற்றதை அடுத்து, கடைமடை விவசாயிகளுக்கும் நீர் சென்று நல்ல விளைச்சல் ஏற்பட்டது.. இந்த நடப்பாண்டிற்கும் கடைமடை பகுதி வரை நீர் செல்ல தூர்வாரும் பணிகள் 80 விழுக்காடு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. 20 விழுக்காடு பணிகள் விரைவாக நடந்து முடியும். 

இதற்காக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆட்சியர்கள் நேரடியாக சென்று கண்காணித்து வருவதால், பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. 48 பொறியாளர்கள் இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தொழில் வளம் பெருகும் பட்சத்திலேயே இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படும். விபத்துகளை குறைப்பதற்கு சாலைகளின் விரிவாக்கம் என்பது அவசியமான ஒன்றாகும். 

ஊரடங்கு நீட்டிப்பு அல்லது கடுமையாக்குவது தொடர்பான விஷயம் தவறானதாகும். மீண்டும் ஊரடங்கு என்று வதந்தி பரப்பிய நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் குறைந்தளவிலான பகுதியில் மக்கள் அதிகளவு இருக்கின்றனர். இதனால் கொரோனா அதிகமாக பரவி வருகிறது என்று கூறினார்..

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edappadi Palanisamy announce curfew extend is not truth


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->