கட்சிதமாக காய் நகர்த்தும் எடப்பாடி.! ஓட்டை பிடிக்காமல்.,கோட்டைவிட்ட ஸ்டாலின்.,கதறும் உடன்பிறப்புகள்!!  - Seithipunal
Seithipunal


வருகின்ற மே 19 ஆம் தேதி அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. 

இதற்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் வரும் 17 ஆம் தேதியோடு முடிவடைகிறது. இதனால், அதிமுக, அமமுக, மற்றும் திமுக ஆகிய மூன்று கட்சிகளும் 17 ஆம் தேதிவரை பொறுப்பாளர்கள், அவரவர் பகுதிகளில் கட்டாயம் இருக்க வேண்டும் என கட்டளை இட்டுள்ளது.  

பிரச்சாரம் ஓய இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கின்றது. எனவே, பணப்பட்டுவாடா உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளராகச் செந்தில் பாலாஜியும்,அதிமுக வேட்பாளர் விவி.செந்தில்நாதனும் மற்றும் அமமுக வேட்பாளர் சாகுல் அமீதும் போட்டியிடுகிறார்கள். 

இந்நிலையில் அந்த தொகுதி மக்கள் அதிகாரபூர்வமற்ற தகவல்களை அளித்து வருகின்றனர். இதுகுறித்து அவர்கள், மூன்று கட்சியினரும், ஒருவருக்கொருவர் சொல்லி வைத்துக்கொண்டு பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வருகின்றனர். நீங்கள் காலையில் கொடுங்கள் நாங்கள் மாலையில் கொடுக்கிறோம் என இயல்பாகவே ஈடுபடுகிறார்கள். 

இதுகுறித்து அமமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் எழுதப்படாத ஒப்பந்தமே உருவாகியிருக்கிறது. திமுகவும் இதனை தடுக்கும் மூடில் இல்லை. லோக்கலில் இருக்கும் போட்டிக் கட்சிகளின் பொறுப்பாளர்களுக்கு மாறாக தாங்கள் பணம் கொடுக்கும் நேரத்தையும் சொல்லிவிட்டே விநியோகம் செய்கிறார்களாம். 

மற்ற 3 தொகுதிகளிலும் இதே நிலை தான் நீடிக்கிறது. அதிமுகவும், அமமுகவும் போட்டி போட்டுக் கொண்டு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசுகின்றன. ஆனால், திமுகவோ பணத்தை எடுத்து கொடுக்க மிகவும் யோசனையில் இருக்கின்றதாம். பொறுப்பாளர்கள் பணப்பட்டுவாடாவில் இப்படி பொறுப்பற்று இருப்பது ஸ்டாலினின் முதல்வர் கனவிற்கு செதுக்கப்படும் ஆப்பாக இருக்கும் என திமுகவின் அடிமட்ட தொண்டர்கள் புலம்பி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edappadi beat stalin by his plan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->