காவல் துறையினர் மீது அவதூறு கூற இயலாது.. அவர்களும் மனிதர்கள் தான். முதல்வர் அதிரடி பேட்டி.!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் உலக நாடுகளில் பெரும்பாலாவை தவித்து வருகிறது. தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர். தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர். 

பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையும் அடுத்தடுத்து அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலும் கரோனா வைரஸ் பரவியுள்ளது. இதனால் நாடு தழுவிய ஊரடங்கு அமலாங்கியுள்ளது. கரோனா இந்தியாவில் சமூக தொற்றாக மாறாமல் இருக்க அரசு பல்வேறு தொடர் நடவடிக்கையை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 4067 ஆக உயர்ந்துள்ளனது. 109 பேர் பலியாகியுள்ளனர். 

இந்த நிலையில், தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையும் 500 க்கும் அதிகமாக சென்ற நிலையில், தமிழக முதல்வர் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழக அரசு மேற்கொண்டுள்ள கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பேசினார். 

மேலும், தமிழக காவல் துறையினர் நேரக்காலம் பார்க்காது பணியாற்றி வருகின்றனர். மே மாதத்தின் உச்சி வெயிலிலும், இரவு பகல் பாராது உழைத்து வருகின்றனர். தொடர்ந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் மீது மொத்தமாக குறைகளை கூறிவிட இயலாது. மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் தள்ளிவைக்கப்பட்டுள்ள தேர்வுகள் போன்றவை நோயின் தீவிரத்தை பொறுத்து ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.  

இதனைப்போன்று கரோனா வைரஸின் தாக்கத்தை மேலைநாடுகள் நன்கு உணர்ந்துள்ள நிலையில், அதனை அடிப்படையாக கொண்டே அரசு பல நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வீடுதேடி வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நோயின் தீவிரம் அதிகரித்துவிட்டால் கட்டுப்படுத்த இயலாது. நோய் அனைவருக்கும் வருவது இயற்கை.. நாம் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edapadi palanisamy speech about police


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->