144 தடை உத்தரவு நாட்களில், ஊழியர்களின் சம்பள பிடித்தம் கூடாது.. எடப்பாடி பழனிச்சாமி அதிரடி..!! - Seithipunal
Seithipunal


தனியார் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நாளில் பணிக்கு வராத பட்சத்தில், ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்ய கூடாது என்று தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் துவங்கியுள்ளது. இந்தியாவில் மொத்தமாக 7 பேர் பலியாகியுள்ளனர். 400 க்கும் அதிகமானோர் கரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் உள்ளனர். 

அணைத்து மாநிலத்திலும் தேவையான முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு உள்ளிட்ட இந்தியாவின் 84 மாவட்டங்கள் மத்திய அரசால் தனிமைப்படுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தமிழக முழுவதும் நாளை மாலை முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அத்தியாவசிய தேவையை தவிர்த்து பிற கடைகள் மற்றும் தொழிற்சாலைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஊழியர்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நாட்களில் பணிக்கு வராத பட்சத்தில், அவர்களின் ஊதியம் பிடித்தம் செய்ய கூடாது என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

during 144 curfew leave pvt company could not hold worker salary tn govt announce


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->