#சற்றுமுன்: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தீவிரப்படுத்தி உள்ளது.

அந்த வகையில் திமுக தலைமையிலான கூட்டணியில் தற்போது வரை இந்தியன் முஸ்லிம் லீக் கட்சியுடனும், மனிதநேய மக்கள் கட்சியுடனும் கூட்டணி தொகுதிப் பங்கீடு முடிவாகியுள்ளது. 

அதன்படி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து திமுக கூட்டணியில் உள்ள விசிக-வுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கி திமிக்க ஒப்பந்தம் போட்டுள்ளது.

இந்நிலையில், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், "முக ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நாளை காலை 9 மணிக்கு காணொளி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

duraimurugan announce march 4


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->