ராமேஸ்வரத்தில் மூடப்பட்ட அப்துல் கலாம் படித்த பள்ளி..! - Seithipunal
Seithipunal


 

மத்திய அரசுப் பள்ளி ஆசியர்களுக்கு இணையாக, தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கை விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல் படுத்த வேண்டும், என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ ஜியோ, கால வரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளது.

இதனால், தமிழகத்தில் இயங்கும் 80 சதவீத அரசுத் துவக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமல், மாணவர்கள் அவர்களாகவே, பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

மதுரை உட்பட 6 மாவட்டங்களில், உள்ள அனைத்து, அரசு ஆரம்பப் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

அதே போல், தற்போது ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் படித்த பள்ளியில் பணி புரிந்து வரும் ஆசிரியர்களும் போராட்டத்தில் கலந்து கொள்வதால், அந்தப் பள்ளியும் பூட்டப் பட்டுள்ளது.

இதனால், பள்ளிக்கு வருகை தரும் மாணவர்கள், என்ன செய்வதென்று தெரியாமல், சாலை ஓரங்களில் அமர்ந்திருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Due to the teachers strike, closed the Fovt. primary schools


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->