மூன்று முக்கிய பிரச்சியை எழுப்பி எடப்பாடி அரசுக்கு டும்...டும்...டும்.. அடித்த டாக்டர்.ராமதாஸ்.!  - Seithipunal
Seithipunal


டும்...டும்...டும் எப்போது விடியும்? டும்...டும்...டும்... என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழகத்தின் மிக முக்கியமான 3 தேசிய நெடுஞ்சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று 15 ஆண்டுகளாக போராடியும் எந்த பயனும் ஏற்படவில்லையே.... அது ஏன்? டும்...டும்...டும்....

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்னை முதல் வாலாஜா வரையிலான பாதை மிக மோசமாக இருப்பது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ‘‘மோசமான சாலைகள் காரணமாக விபத்து ஏற்பட்டால் அந்த விபத்துக்கு பொறுப்பேற்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இழப்பீடு வழங்க வேண்டிய நிலை வரும்’’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளதே?. இதற்கு காரணம் பல முறை போராடியும் அச்சாலை சீரமைக்கப்படாதது தானே. டும்...டும்...டும்....

சென்னை முதல் வாலாஜா வரையிலான சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்று பல முறை பாட்டாளி மக்கள் கட்சி போராட்டம் நடத்தியது. மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. மத்திய அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தியது. ஆனாலும், பயனில்லையே ஏன்? டும்...டும்...டும்....

திண்டிவனம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை விரைந்து அமைக்க வேண்டும் என்று 15 ஆண்டுகளாக போராடி வருகிறேன். ஒரு முறை இந்த கோரிக்கையை வலியுறுத்தி இந்த நெடுஞ்சாலை செல்லும் முக்கிய நகரங்களில் 16 இடங்களில் பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. திண்டிவனம் போராட்டத்தை நானே தலைமையேற்று நடத்தினேன். ஆனாலும் பயனில்லையே? டும்...டும்...டும்....

தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சரிடம் நானும், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணியும் பல முறை தொலைபேசியில் பேசினோம். மத்திய அரசிடம் மனு கொடுத்தோம். ஆனாலும் எதுவுமே நடக்கலையே... அது ஏனோ? டும்...டும்...டும்....

திண்டிவனம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை புதுச்சேரி, தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய 3 மாநிலங்களை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலை ஆகும். இந்த சாலையின் அவலநிலையைக் கண்ட செஞ்சி நீதிமன்றம் அந்த சாலையில் வாகனங்களை இயக்கக்கூடாது என்று அறிவித்து போக்குவரத்துக்கு தடை விதித்தது. அடுத்த நாளே சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகிய அதிகாரிகள் தடையை நீக்கி உத்தரவு வாங்கினார்கள். தடையை விலக்குவதில் காட்டிய வேகத்தை சாலைப் பணிகளை விரைவுபடுத்துவதில் காட்டவில்லையே.... அது ஏனோ? டும்...டும்...டும்....

சென்னையிலிருந்து சேலம் செல்வதற்கான நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டைக்கும், சேலத்திற்கும் இடைப்பட்ட பகுதிகளில் இதில் 8 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலை 2 வழிச்சாலையாக உள்ளது. இச்சாலை அமைக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆன பிறகும், 8 புறவழிச் சாலைகளும் இதுவரை 4 வழிச்சாலையாக மாற்றப்படவில்லை. இதனால் ஏற்படும் விபத்துகளில் ஏராளாமானோர் உயிரிழக்கின்றனர். இதற்காகவும் பா.ம.க. போராட்டங்களை நடத்தியது. மத்திய அமைச்சரிடம் முறையிட்டது. ஆனால், எந்த விடிவும் பிறக்கவில்லையே.... அது ஏன்? டும்...டும்...டும்....

மக்களாட்சியில் மக்கள் குரல்கள் மதிக்கப்பட வேண்டும். ஆனாலும் தமிழகத்தின் முதன்மையான மூன்று தேசிய நெடுஞ்சாலைகள் குறித்த கோரிக்கைகளுக்கு எந்த பதிலுமே கிடைக்கலையே.... டும்...டும்...டும் " என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

drramadoss emphasis to finish 3road works


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->