பொங்கலும் மது போதையும்.. வசூலில் உச்சகட்ட சாதனை கொண்டாட்டம்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் உள்ள அரசு மதுபான கடைகள் விடுமுறை நாட்களில் பெரும் சாதனை படைப்பது வழக்கமான ஒன்றாகியுள்ளது. ஒவ்வொரு அரசு விடுமுறைக்கு, மதுபான கடை விடுமுறை இல்லாத நாட்களிலும் மதுபான விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யும் பெரும் சாதனையை படைத்து வருகிறோம். 

இதனால் நாம் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகவேண்டிய வேளையில், கடந்த வருடத்தின் பொங்கல் பண்டிகைக்கும் மதுபான கடைகளில் நல்ல வருமானம் கிடைத்தது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையான மூன்று நாட்களில், மாட்டு பொங்கல் நாளன்று மட்டும் விடுமுறை அளிக்கப்படும். 

விடுமுறையை அறிந்து கொள்ளும் நமது தங்க குடி மகன்கள் திட்டம் போட்டு மதுபானங்களை முன்னதாகவே வாங்கி வைத்துக்கொள்ளும் பழக்கத்தை வைத்துள்ளதால் போன வருடத்தை விட சூடு பிடித்த விற்பனை நடந்துள்ளது. 

போகி பண்டிகை தினமான கடந்த 14 ஆம் தேதியன்று ரூ.178 கோடி விற்பனையும், பொங்கல் பண்டிகையான 15 ஆம் தேதியன்று ரூ.253 கோடி விற்பனையும் நடந்துள்ளது. 16 ஆம் தேதி மாட்டுப்பொங்கல் விடுமுறைக்கு பின்னர், 17 ஆம் தேதி ரூ.174 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

இதன் அடிப்படையில் பொங்கல் சிறப்பு பரிசாக பலரின் உள்ளம் மது போதையில் குதூகலமாக இருந்தாலும், உடல் உறுப்புக்கள் விரைவில் செயலிழக்க மூன்றே நாட்களில் மதுபான விற்பனை ரூ.605 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

drinks pongal celebration sales


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->