தமிழகத்தில் மது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக விற்பனை.. தமிழக அரசு உத்தரவு.! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் மது அருந்திவிட்டு காலி மது பாட்டில்களை ஆங்காங்கே வீசுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும், குறிப்பாக வன விலங்குகளுக்கு காயம் ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்த நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மலைப்பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் கண்ணாடி பாட்டில்களில் திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை ஏப்ரல் 25-ஆம் தேதிக்குள் வகுக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்றம் கெடு விதித்திருந்தது. மேலும் மீறினால் மதுபான கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என்றும் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் ரூ.10 கூடுதலாக வசூலிக்க டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் காலி மது பாட்டிலை டாஸ்மாக் கடைகளில் திரும்ப கொடுத்துவிட்டு கூடுதல் கட்டணமான ரூ.10 திரும்ப பெறுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், மது பாட்டில்களில் இந்த பாட்டில் நீலகிரி மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டது என்ற முத்திரை இடம்பெற்றிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Drinks bottle 10 rupees increased Neelagiri district


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->