தமிழ் இலக்கிய உலகுக்கு பெரும் இழப்பு - மருத்துவர் இராமதாசு வேதனை.!! - Seithipunal
Seithipunal


பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில், " சாகித்ய அகாதமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும், புதினப் படைப்பாளருமான சா. கந்தசாமி உடல்நலக் குறைவால்  காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்த சா.கந்தசாமி இளம் வயதிலேயே எழுத்துலகில் பல சாதனைகளை படைத்தார். அவரது 28-ஆவது வயதில் எழுதிய சாயாவனம் என்ற புதினம் நவீன இந்திய இலக்கியங்களில் சிறந்த ஒன்று என்று தேசிய புத்தக அறக்கட்டளை  அறிவித்தது. விசாரணைக் கமிஷன் புதினத்திற்காக சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.

பப்பாளி மரம், குறுக்கீடு, எட்டாம் கடல் உள்ளிட்ட பல இவரது சிறுகதைகள் எதார்த்தத்தை வெளிப்படுத்துபவை. 50 ஆண்டுகளுக்கு முன்பே ‘சாயாவனம்’ புதினத்தின் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியவர். சா. கந்தசாமி அவர்களின் பல படைப்புகளை நான் படித்து ரசித்திருக்கிறேன். அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கு பெரும் இழப்பு ஆகும்.

எழுத்தாளர் சா. கந்தசாமி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், இலக்கிய வாதிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் " என்று கூறியுள்ளார்..

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramdoss Regret about S Kandhasamy passed away


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->