தேர்தல் கருத்துக்கணிப்பு தொடர்பாக முன்னாள் தேர்தல் ஆணையர் யோசனை.. மருத்துவர் இராமதாஸ் வரவேற்பு.! - Seithipunal
Seithipunal


தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் தேர்தல் ஆணையரின் யோசனைக்கு மருத்துவர் இராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

இது குறித்த ட்விட்டில், " தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் தடை செய்யப்பட வேண்டும்; வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளுக்கு பதிலாக ஒப்புகைச் சீட்டுகளைத் தான் எண்ண வேண்டும் என்று ஓய்வுபெற்ற தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி கூறியுள்ள கருத்துகள் சரியானவை; வரவேற்கத்தக்கவை.

கருத்துக்கணிப்புகள் திரிக்கப்படுபவை; திணிக்கப்படுபவை. ஒரு தரப்புக்கு ஆதரவான கருத்துக் கணிப்புகள்  தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அவை தடை செய்யப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. இதை பா.ம.க. பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து தொடர்ந்து ஐயங்கள் எழுப்பப்படும் நிலையில், ஒப்புகைச் சீட்டுகளில் பதிவான வாக்குகளை எண்ணுவது ஐயங்களைப் போக்கும். தேர்தல் முடிவுகள் மிகவும் வெளிப்படையாக அமைவதை உறுதி செய்யும் " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Welcomes to Ex Election Commission Leader Decission about Pre-election polls


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->