சிங்கங்களுக்கு கொரோனா வந்தது எப்படி? விசாரணை கேட்கும் டாக்டர் இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது குறித்த விஷயத்தில் விசாரணை தேவை என மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் ட்விட்டர் பதிவில், " வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், ஒரு சிங்கம்  உயிரிழந்து விட்டதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. சிங்கங்களிடமிருந்து பிற விலங்குகளுக்கும் தொற்று பரவாமல் தடுக்க வேண்டும்.

வண்டலூர் உயிரியல் பூங்கா பல வாரங்களாக மூடப்பட்டிருக்கிறது. பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. பயிற்சியாளர்களும், உணவு வழங்கும் பராமரிப்புக் குழுவினரும் மட்டுமே விலங்குகளை நெருங்க முடியும் எனும் நிலையில் அவற்றுக்கு தொற்று எவ்வாறு ஏற்பட்டது?.

விலங்குகளை பராமரிக்கும் குழுவினருக்கு கொரோனா ஆய்வு செய்யப்பட்டதா? தடுப்பூசிகள் போடப்பட்டனவா? அவர்கள் மூலமாக சிங்கங்களுக்கு கொரோனா பரவியிருக்கலாமா? என்பது குறித்து விசாரணை தேவை. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr ramadoss Tweet about need inquiry for lions affected by covid in vandalur zoo


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->