தலித் எழில்மலை மறைவிற்கு மருத்துவர் இராமதாசு இரங்கல்..!! - Seithipunal
Seithipunal


இந்திய முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவர் தலித் எழில்மலை. இவர் கடந்த ஜூன் 24 ஆம் தேதி, 1945 ஆம் வருடத்தில் சென்னை செங்கல்பட்டில் பிறந்தார். இவர் கடந்த 1998 ஆம் வருடத்தின் போது, வாஜ்பாய் அரசாங்கத்தின் சமயத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தார். 

இதுமட்டுமல்லாது மாநில சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். சிதம்பரம் தொகுதியில் இருந்து 12 ஆவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அதிமுகவில் இணைந்தார். 

இவர் உடலநலக்குறைவால் உயிரிழந்த நிலையில், இவரது மறைவிற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து, பாட்டாளி மக்கள் கட்சியின் முதல் பொதுச்செயலாளரும், பா.ம.க. சார்பில் முதன்முறையாக மத்திய அமைச்சர் பதவி வகித்தவருமான தலித் எழில்மலை காலமானார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன்.

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் கட்சிக்காக பணியாற்றியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DR Ramadoss regret Dalit Ezhilmalai passed away


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->