கே.என். லட்சுமணன் மறைவு.. மருத்துவர் இராமதாசு இரங்கல்.!! - Seithipunal
Seithipunal


பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் கே.என். லட்சுமணன் உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவிற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்த அறிக்கையில், " தமிழ்நாடு பாரதிய ஜனதாக் கட்சியின் முன்னாள் தலைவர் கே.என். லட்சுமணன் அவர்கள் உடல்நலக் குறைவால் நேற்றிரவு காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

தமிழ்நாடு பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவராக இரு முறையும், தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராக ஒரு முறையும் பணியாற்றியவர். வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட தேசியத் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர். தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் நல்லுறவை பேணியவர். நெருங்கிய நண்பர்களில் ஒருவர். என்னுடன் அன்பாகவும், மரியாதையுடனும் பழகிய மனிதர்.

கே.என். லட்சுமணன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், பாரதிய ஜனதா கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் " என்று கூறியுள்ளார்..  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss regret about KN Lakshmanan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->