பொன்னேரியை தூர்வாரிய பொன்னான தருணங்கள் - நினைவு கூர்ந்த மருத்துவர் இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


அரியலூரில் உள்ள பொன்னேரியை தூர்வார இளைஞர்களுடன் ஏரியில் இரண்டு நாட்கள் போராட்டம் நடத்தியதை மருத்துவர் இராமதாஸ் நினைவுகூர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியினரை நெகிழவைத்தார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2021 ஜெயங்கொண்டம் தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலு அவர்களை ஆதரித்து, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். 

இந்த பிரச்சார கூட்டத்தில் மருத்துவர் இராமதாஸ் பேசுகையில், " நான் அரியலூர் மாவட்டத்திற்கு பலமுறை வந்துள்ளேன். ஒருமுறை பொன்னேரி தூர்வார வேண்டும் என்று கூறி மாவீரன் ஜெ.குருவிடம் தெரிவிக்கவே, இரண்டு நாட்கள் இங்கு தங்கியிருந்தேன். 

எனது மூத்த மகன் ஜெ.குருவுடன் ஏரியில் இளைஞர்களுடன் போராட்டம் நடத்தினோம். இரண்டு நாட்கள் எரிக்குள்ளேயே இருந்தோம். அந்த நினைவுகள் மறக்க முடியாதவை. தொகுதியின் வளர்ச்சிக்காக வழக்கறிஞர் கே.பாலு அயராது படுபவர். அதிமுக கூட்டணி மிகசிறந்த கூட்டணி. தமிழக முதல்வரின் ஆட்சியை பற்றி எந்த விதமான குறையும் கூற முடியாது. அதிமுகவின் தேர்தல் அறிக்கை அமுதசுரபி. பாமகவின் தேர்தல் அறிக்கை வளர்ச்சிக்கான தேர்தல் அறிக்கை. மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பதே பாமகவின் தேர்தல் அறிக்கை. 

நமது அறிக்கையை பார்த்து தான் திமுக நகலெடுத்து விநியோகம் செய்து வருகிறது. திமுகவினர் நமது அறிக்கையை நகலெடுத்து வருகின்றனர். பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி வர வேண்டும். அவரை தேர்ந்தெடுக்க வழக்கறிஞர் பாலுவை வெற்றியடைய செய்ய வேண்டும். 

6 சிலிண்டர் வருடத்திற்கு இலவசமாக வழங்கப்படுவதால் பணம் சேமிக்கப்படும். அதிமுக ஆட்சியில் இலவசமான கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். அதிமுக ஆட்சி அமைந்ததும் வீட்டிற்கு ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும். பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4000 மற்றும் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி, 5 வருடங்களில் 1 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு திட்டம் கூறப்பட்டுள்ளது. 

இல்லத்தரசிகளுக்கு வாஷிங் மிஷின் மற்றும்சோலார் அடுப்பு இலவசமாக அதிமுக அரசு வழங்கும். திமுக ஆட்சிக்கு வராது. கடந்த 4 வருடமாக மின்வெட்டு பிரச்சனை இல்லை. திமுக ஆட்சி தமிழகத்திற்கு இருண்டகாலமாக இருந்தது. அது மீண்டும் நமக்கு வேண்டாம். பாமக தேர்தல் அறிக்கையில் பிள்ளைகள் வெளிநாடுகளில் சென்று இலவசமாக படிக்க திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil

தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Memorize Cleaning Ponneri Lake in Jayankondam TN Election 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->